Gold Price Today: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்.. - Tamil News | gold price today 27 july 2024 saturday chennai gold price increasing tamilnadu | TV9 Tamil

Gold Price Today: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்..

Updated On: 

27 Jul 2024 09:58 AM

கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் நேற்று  அதிரடியாக கிராமுக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.54,960 ஆகவும் கிராமுக்கு ரூ. 6.870 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

Gold Price Today: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா? அதிர்ச்சியில் மக்கள்..

மாதிரி புகைப்படம்

Follow Us On

தங்கம் விலை: மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு ஏற்கனவே 15% வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அதை வெறும் 6% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வந்த தங்கம் நேற்று  அதிரடியாக கிராமுக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.54,960 ஆகவும் கிராமுக்கு ரூ. 6.870 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூலை 27 ஆம் தேதியான இன்று தக்ஙம் விலை ரூ.51,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை:

ஜூலை 27 ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி சென்னையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது, சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ரூ.51,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,465க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.55,360 ஆகவும் கிராமுக்கு ரூ. 6,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.89.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.89,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை சேமிப்பது எப்படி?

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது.

தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்.. இன்றைய போட்டி விவரங்கள்..

 

Related Stories
RBI : அமெரிக்கா, ஜெர்மனியை விட பணவீக்கத்தை சிறப்பாக கையாண்ட இந்தியா.. ரிசர்வ் வங்கி புகழாரம்!
Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!
New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!
Gold Price September 16 2024: எகிறிய தங்கம் விலை.. தொடர்ந்து உயரும் தங்கம் விலையால் கலக்கத்தில் மக்கள்..
Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?
Gold Price September 14 2024: விண்ணை முட்டும் தங்கம் விலை.. தொடர்ந்து அதிகரிக்கும் விலையால் வேதனையில் மக்கள்..
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version