அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு இவ்வளவா? - Tamil News | | TV9 Tamil

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு இவ்வளவா?

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை: இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன.ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.. சவரனுக்கு இவ்வளவா?

தங்கம்

Updated On: 

27 May 2024 10:16 AM

தங்கம் விலை: 2024ஆம் ஆண்டில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. எனவே, மே மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.6,655க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இந்த விலை குறையுமா என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதிரடியாக உயர்ந்திருக்கிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520  உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,520 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,190ஆக உள்ளது.

Also Read: மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: SBI வங்கியில் என்ன வட்டி?

வெள்ளி விலை:

அதேபோல, வெள்ளி கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ.97.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.97,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் ஏன் முக்கியம்?

இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன.

ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது.

தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாதம் ரூ. 5,000க்கு மேல் வட்டி… பணத்தை சேமிக்க போஸ்ட் ஆபிஸ் வழங்கும் பக்காவான முதலீட்டு திட்டம்!

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?