WGC : 2025-ல் தங்கம் விலை குறையலாம்.. உலக தங்க கவுன்சில் கணிப்பு!

Gold Price | 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறையலாம் என்று உலக WGC (World Gold Council) தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. WGC-ன் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை என்னவாக இருக்கும், தங்கம் விலை குறையும் என சொல்லப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம். 

WGC : 2025-ல் தங்கம் விலை குறையலாம்.. உலக தங்க கவுன்சில் கணிப்பு!

தங்கம்

Updated On: 

15 Dec 2024 10:02 AM

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போது ஒரு சவரன் 22 கேரட் தங்கம் ரூ.57,120-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அது வரும் நாட்களில் ரூ.60,000 எட்ட கூடும் என கூறப்படுகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தங்கத்தின் விலையில், கடும் ஏற்றம் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது, 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறையலாம் என்று உலக WGC (World Gold Council) தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. WGC-ன் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை என்னவாக இருக்கும், தங்கம் விலை குறையும் என சொல்லப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Farmer Loan : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!

ஒரே மாதத்தில் கடும் ஏற்றம் மற்றும் இறக்கத்தை சந்தித்த தங்கம் விலை

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தங்கம் விலை கடும் ஏற்றம் மற்றும் இறக்கத்தை சந்தித்துள்ளது. அதாவது, நவம்பர் தொடக்கத்தில் ஒரே வாரத்தில் கடும் சரிவையும், நவம்பர் இறுதியில் ஒரே வாரத்தில் கடும் உயர்வையும் சந்தித்துள்ளது. அதாவது, நவம்பர் மாத தொடக்கத்தில் அதாவது நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டதும் தங்கம் விலை கடுமையாக சரிந்தது. அந்த வாரத்தில் தங்கம் விலை ரூ.3,280 வரை குறைந்தது. அதுவே, நவம்பர் 19 முதல் 24 வரையிலான காலக்கட்டத்தில் தங்கம் விலை ரூ.2,920 வரை உயர்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கம் விலை குறித்து உலக தங்க கவுன்சில் கூறுவது என்ன?

தங்கம் விலை கடந்த பல மாதங்களாகவே கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில் 2025-ல், கடும் உயர்வு பெறலாம் என கூறப்பட்ட நிலையில், உலக தங்க கவுன்சில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் 2025 ஆம் ஆண்டு தங்கம் விலை மெதுவாக உயரும் என்றும், தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி 20, 2025 அன்று அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில், உலக முதலீட்டாளர்களின் கவனம் முழுவது டாலரின் மீதுதான் இருக்கும். இதன் காரணமாக, தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : PF Claim : உங்கள் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

2025 ஆம் ஆண்டின் தங்கம் விலை குறித்த வங்கிகளின் கணிப்புகள்

தங்கம் விலை குறித்தி சில உலக வங்கிகள் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் தங்கம் விலை 3,000 டாலர்களாக இருக்கும் என கோல்டுமேன் சாச்ஸ் குழுமம் கனித்துள்ளது. இந்த நிலையில், யுஎஸ்பி ஏஜி தங்கம் விலை 2,900 டாலர்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தங்கத்தின் மீதான சீனாவின் நடவடிக்கை உற்று கவனிக்கப்படுகிறது. இதுவரை அங்குள்ள முதலீட்டாளர்கள் விலை ஆதரவை வழங்கியுள்ளனர், அதே வேளையில் நுகர்வோர் ஓரம் தள்ளப்பட்டுள்ளனர். இது, இது சந்தையில் நேர்மைறையான மற்றும் எதிர்மறையான  தாக்கங்களை உண்டாக்கும் என உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிக்கக்கூடாது..?
அதிகளவில் உப்பு சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!
புடவையில் சொக்க வைக்கும் நடிகை மாளவிகா மோகனன்
ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?