Gold Price Today: தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்! - Tamil News | gold silve price today 11 july 2024 check gold silver price in chennai | TV9 Tamil

Gold Price Today: தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை : நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gold Price Today: தங்கம் விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம்!

மாதிரிப்படம்

Published: 

11 Jul 2024 10:35 AM

தங்கம் விலை: ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஜூன் மாதத்தில் தொடகத்தில் இருந்தும் ஏற்ற இறக்கத்தில் இருக்கிறது. ஜூலை மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை விலைமாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. நேற்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.54,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.6,760க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,840 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,230 ஆகவும் இருந்தது.

இன்றைய தங்கம் விலை

ஜூலை 11ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளத். அதன்படி ஒரு சவரன் ரூ.54,280 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6785க்கு விற்பனையாகிறது

வெள்ளி விலை

அதேபோல, வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.100.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

Also Read : ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. முழு விவரம் இதோ!

சேமிப்பு

உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படிதான், வீடுகளில் திடீர் செலவு வரும் நாட்களில் தங்கம் ஒரு காக்கும் தேவதையாகவே மாறிவிடுகிறது. இந்தியாவைச் பொருத்தவரை ஏழை மற்றும் நடுத்தர வர்கத்திற்கு தங்கம் தான் முதல் மற்றும் ஒரே சேமிப்பாக இருக்கிறது. தங்கம் தான் சரியான சேமிப்பு என்பதால் இவர்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தை நகைகளாக மட்டும் வாங்காமல் நாணயங்கள், தங்க கட்டிகள், தங்க பத்திரம் வடிவில் வாங்கலாம். தங்கத்தின் செய்யும் முதலீடு பாதுகாப்பானதாகவும், லாபகரமானதாவும், நமது எதிர்கால நிதி சிக்கல்களை சமாளிக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!