5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gold Price : தங்கம் விலை வரும் நாட்களில் குறையுமா? எவ்வளவு வரை எதிர்பார்க்கலாம்? நிபுணர்கள் கணிப்பு இதுதான்!

Gold Silver Rate : ஜூலை மாதத்திலும் தங்கம் விலை பெரிதாக உயராவிட்டாலும் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. அந்த வகையில் பட்ஜெட் தினமான நேற்று காலை தங்கம் விலை குறைந்தது. அடுத்த சில மணி நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் தங்கம், வெள்ளி, வைரத்துக்கான இறக்குமதி வரியை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் தங்கம் விலை சரிந்தது

Gold Price : தங்கம் விலை வரும் நாட்களில் குறையுமா? எவ்வளவு வரை எதிர்பார்க்கலாம்? நிபுணர்கள் கணிப்பு இதுதான்!
தங்கம் விலை
Follow Us
c-murugadoss
CMDoss | Published: 24 Jul 2024 09:12 AM

தங்கம் விலை : உலகளவில் தங்கத்தை நுகரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் வகிக்கிறது. இந்தியாவை போன்ற பிற நாடுகளும் தங்கத்தை சேமித்து வைக்கின்றன. ஏதேனும் நிதி நெருக்கடி காலத்தில் பணத்திற்கு பதிலாக தங்கத்தை கொண்டு பிற நாடுகளில் இருந்து தானியங்கள் கூட வாங்கி, சொந்த நாட்டின் வறுமையை போக்கும் அளவுக்கு தங்கம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இப்படியான தங்களை சேமிப்பாகவும், காலாசாரத்தில் ஒரு பகுதியாகவும் இந்திய மக்கள் பார்க்கின்றனர். அதனால் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் டாப் பட்டியலில் இந்தியா உள்ளது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்தது.

பட்ஜெட் தாக்கம்

ஜூலை மாதத்திலும் தங்கம் விலை பெரிதாக உயராவிட்டாலும் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. அந்த வகையில் பட்ஜெட் தினமான நேற்று காலை தங்கம் விலை குறைந்தது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்தது, அதன்படி சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,480 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,810க்கு விற்பனையானது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.58,240 ஆகவும் கிராமுக்கு ரூ. 7,280 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் தங்கம், வெள்ளி, வைரத்துக்கான இறக்குமதி வரியை குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு தங்கம் விலையில் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான முடிவு நேற்று மாலையே தெரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் தங்கத்தின் விலையில் கடுமையான சரிவு ஏற்பட்டது.

Also Read : குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டம்.. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட என்.பி.எஸ் வாத்சல்யா என்றால் என்ன?

அதிரடியாக குறைவு

தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 2080குறைந்து ஒரு சவரன் ரூ.52,400 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6550 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,005 க்கும் ஒரு சவரன் ரூ.56,040 க்கும் விற்பனையானது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ. 3.50 காசுகள் குறைந்து ரூ. 92.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 92,5000 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய வித்தியாசத்தை எதிர்பார்க்காத மக்கள் பலரும் நேற்று மாலையே நகைக்கடைக்கு படையெடுத்தனர். இந்நிலையில் வரி குறைப்பு காரணமாக வரும் நாட்களில் மேலும் தங்கம் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகை விலை குறையுமா?

இது குறித்து கணிப்பு தெரிவித்துள்ள நகைக்கடை உரிமையாளர்கள் வரும் நாட்களில் மேலும் தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்றும், கிராமுக்கு ரூ.200 வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதன்படி கிராம் தங்கத்தில் விலை ரூ.6300 வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை குறைவு தொடர்பான கணிப்பை உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது. வரி குறைப்பால் மட்டுமே இந்த விலை குறைவு கணிப்பு இருக்கிறது. மற்ற உலக நடப்பு காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படவும், விலை ஏறவும் கூட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்

Latest News