ஆதார் கார்டு முக்கிய விவரம்.. புதுப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிப்பு!

Aadhaar Card Update: ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கடைசி நாள் இரண்டாவது முறையாக மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பயோமெட்ரிக்ஸ் தரவுகளை அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் கட்டணம் செலுத்தி மட்டுமே புதுப்பிக்க முடியும்.

ஆதார் கார்டு முக்கிய விவரம்.. புதுப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிப்பு!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Updated On: 

18 Oct 2024 09:18 AM

ஆதாரை நிர்வகிக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதாரை புதுப்பிப்பதற்கு காலக்கெடுவை மீண்டும் நீடித்துள்ளது. இப்போது டிசம்பர் 14 2024 வரை உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். முன்னர் ஜூன் 2024 வரை நீடிக்கப்பட்டிருந்த இந்த கால அவகாசம் தற்பொழுது டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆதார் விவரங்களை இலவசமாக UIDAIயின் இணையதளப் போர்டல் மூலம் மட்டுமே புதுப்பிக்க முடியும். ஆனால் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க முடியாது. பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டுமானால் ஆதார் மையங்களுக்குச் சென்று கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஏன் புதுப்பிக்க வேண்டும்?

ஆதார் என்பது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் 12 இலக்கம் கொண்ட தனித்துவமான அடையாள எண். இதன் மூலம் இந்திய குடிமக்கள் அரசாங்கத் திட்டங்களில் பதிவு செய்வதற்கு, பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, வங்கி கணக்குகள் திறப்பதற்கு, வரிகள் கட்டுவதற்கு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற இந்த ஆதாரை எண்ணை பயன்படுத்தலாம்.

உங்களின் ஆதார் விவரங்கள் காலாவதியாக இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ ஆதார் அங்கீகாரத்துடன் பெறப்படும் சேவைகளை பெறுவதில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். தவறான முகவரிகள் நிதி பரிவர்த்தனைகளில் சிக்கலை ஏற்படுத்தும், தவறான பயோ மெட்ரிக் தரவு உங்கள் அங்கீகாரத்தை மாற்றிவிடும். மேலும் விமான நிலையங்களில் அங்கீகார சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.

ஆதார் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அதன் ஆபத்தையும் அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது. நீங்கள் உங்கள் ஆதாரை புதுப்பிப்பதின் மூலமாக அரசாங்கம் உங்களின் தரவுகளை துல்லியமாகவும்‌ பாதுகாப்பாகவும் பராமரிக்க முடியும். இது ஆதார் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.

யாரெல்லாம் ஆதாரை புதுப்பிக்க வேண்டும்:

எல்லா ஆதார் பயனாளர்களும் வழக்கமான புதுப்பித்தல்களை செய்து பயனடைந்து கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட சில புதுப்பித்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார்: உங்கள் ஆதார் வழங்கப்பட்டு 10 வருடங்களுக்கு ஆகி விட்டது என்றால் உங்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

15 வயதை எட்டிய குழந்தைகள்: சிறு வயதில் எடுக்கப்பட்ட‌ ஆதாரின் பயனாளர்கள் தற்பொழுது 15 வயது எட்டி இருந்தால் அவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இது அவர்களின் பயோமெட்ரிக் அடையாள நோக்கங்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும்.

Also Read: Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கியச் செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

பயோமெட்ரிக் மாற்றங்கள்: விபத்து, அறுவை சிகிச்சை அல்லது மருத்துவ நிலைகளால் உங்கள் பயோமெட்ரிக் தரவுகளான கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்ளை பாதித்திருந்தால் அந்த மாற்றங்களை பிரதிபலிக்க உங்கள் ஆதாரை நீங்கள் புதுப்பிக்க வேண்டும்.

அங்கீகரிப்பு பிரச்சனை: நிதி பரிவர்த்தனைகளின் போது அல்லது அரசாங்கத் திட்டங்களை அணுகும் போது ஆதார் அங்கீகாரத்தில் தோல்விகளை சந்தித்தால், மீண்டும் சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க உங்கள் விவரங்களை மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பது மிகவும் முக்கியம்.

இணையத்தில் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பது எப்படி?

உங்கள் ஆதார் தகவலை இணையத்தில் புதுப்பிக்கும் செயல்முறை எளிமையானது.‌ இது அனைவரும் வசதியான முறையில் புதுப்பித்துக் கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.

UIDAI போர்ட்டலுக்கு செல்லவும்: myaadhar.uidai.gov.in என்ற ஆதார் சுயசேவை புதுப்பிப்பு‌ போர்ட்டலுக்கு செல்லவும்

ஆதார் எண் மற்றும் OTP மூலம் உள்நுழையவும்: உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, உள்நுழைய உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவுச்சொல்லை (one time password – OTP) பயன்படுத்தவும்.

விபரங்களை மதிப்பாய்வு செய்யவும்: உங்கள் ஆதார் சுயவிளத்தில் காட்டப்பட்டுள்ள உங்களின் தகவலை (பெயர், முகவரி போன்றவை) சரி பார்க்கவும்.‌ ஏதேனும் விவரங்கள் காலாவதியானதாகவோ அல்லது தவறுதலாகவோ இருந்தால் புதுப்பிப்பதை தொடரவும்.

விவரங்களை புதுப்பிக்கவும்: தொடர்புடைய ஆவண வகையை (அடையாளச் சான்று அல்லது முகவரி சான்று) தேர்வு செய்து, அசல் ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை JPEG, PNG அல்லது PDF வடிவத்தில் பதிவேற்ற வேண்டும். இதன் அதிகபட்ச அளவு 2MB

கோரிக்கையை சமர்ப்பிக்கவும்: உங்கள் கோரிக்கையை சமர்ப்பித்தவுடன் நீங்கள் ஒரு சேவை கோரிக்கை எண்ணைப் (SRN) பெறுவீர்கள்.‌ இது உங்கள் புதுப்பிப்பின் நிலையை கண்காணிக்க உதவுகிறது.

Also Read: Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!

பயோமெட்ரிக் புதுப்பிப்புகள்:

பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி போன்ற புதுப்பிப்புகளை இணையத்தில் செய்ய முடியும் என்றாலும் கைரேகைகள், கருவிழி ஸ்கேன்கள் அல்லது புகைப்படங்கள் போன்ற பயோமெட்ரிக் தகவலுக்கான மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையத்தில் மட்டுமே செய்ய முடியும். அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வளர்ந்துள்ள குழந்தைகள் பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!