EPFO: ஓய்வு காலத்தில் ரூ.1 கோடி தேடி வரும்.. ஊழியர்களின் ஊதிய உச்சவரம்பு உயர்வு! - Tamil News | Government may raise epfo wage ceiling and how to check pf amount in easy ways in tamil | TV9 Tamil

EPFO: ஓய்வு காலத்தில் ரூ.1 கோடி தேடி வரும்.. ஊழியர்களின் ஊதிய உச்சவரம்பு உயர்வு!

Published: 

20 Sep 2024 22:29 PM

Wage ceiling updates for EPF members: EPF பங்களிப்புக்காக ஒரு ஊழியரின் அடிப்படை சம்பள வரம்பை அதிகரிக்க ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டம் உள்ளது. தற்பொழுது ரூ.15,000 ஊதிய உச்சவரம்பாக உள்ளது. அதை ரூ.21,000 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரை அரசின் முன் உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

EPFO: ஓய்வு காலத்தில் ரூ.1 கோடி தேடி வரும்.. ஊழியர்களின் ஊதிய உச்சவரம்பு உயர்வு!

பணம் (Photo Credit: Anand Purohit/Moment/Getty Images)

Follow Us On

EPFO அதன் உறுப்பினர்களின் வசதிக்காக தொடர்ந்து மேம்பாடுகளைச் செய்து வருகிறது. பெரும்பாலான EPF செயல்பாடுகளை இன்று ஆன்லைனில் செய்ய முடியும். EPF திரும்பப் பெறுவதற்கான வரம்பு ஒரே நேரத்தில் 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், EPF பங்களிப்புக்கான ஊழியர்களின் சம்பள வரம்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. அதை ரூ.21,000 ஆக உயர்த்தும் திட்டம் இருப்பதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மனசுக் மாண்டவியா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

2014இல் EPF இன் சம்பள வரம்பு ரூ.6,500 ஆக மட்டுமே இருந்தது. 2022-ல் ரூ.15,000 இருந்து வருகிறது. தற்பொழுது இது ரூ.21,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சம்பள வரம்பு என்ன?

இது EPF வழங்கப்படும் சம்பளம் வரம்பாக இருக்கும். உதாரணமாக, உங்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.30,000 எனில், ரூ.15,000 EPF-க்கானதாக கருதப்படும். இந்தப் ரூ‌.15 ஆயிரத்தில் 12 சதவீதம் ஊழியர்களும் 12 சதவீதம் நிறுவனத்தின் பங்களிப்பாகவும் இருக்கும்.இதில் ஊழியர்களின் 12 சதவீதத்தில் 8.33% பணியாளர் ஓய்வூதிய திட்டத்திற்கும் (Employee Pension Scheme) 3.67% வருங்கால வைப்பு நிதிக்கும் (Provident Fund) ஒதுக்கப்படுகிறது.

இப்பொழுது மேலே கூறப்பட்ட அடிப்படை சம்பளமான 30,000 ரூபாய்க்கு, EPF கணக்கீடு செய்தால் 15 ஆயிரம் ரூபாய் வரும். அடிப்படைச் சம்பளம் ரூ.15,000க்கு EPF பிடித்தம் மற்றும் ரூ.30,000 அடிப்படைச் சம்பளத்திற்கு EPF பிடித்தம் இரண்டும் ஒன்றுதான்.தற்பொழுது ஒரு ஊழியரின் EPF பங்களிப்பு ரூ.1,800 ஆகும். இதற்காக நிறுவனத்தில் இருந்து 3.67% அதாவது ரூ.550.50 சேர்க்கப்பட்டு மொத்தம் ரூ.2,350.50 ஆக இருக்கும். சம்பள வரம்பு ‌ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், ஊழியிடமிருந்து ரூ.2,520 மற்றும் நிறுவனத்தில் இருந்து ரூ.770.70 என மொத்தம் ரூ.3,290.70 ஆகிவிடும்.

இப்போது உங்கள் வயது 25 எனில் நீங்கள் 60 வயது வரை பணிபுரிந்தால் மொத்த சேவை காலம் 35 ஆண்டுகளாக இருக்கும். அரசு EPF பணத்திற்கு தற்பொழுது ரூ.8.25% வட்டி வசூலிக்கப்படுகிறது. வட்டி இதே விகிதத்தில் தொடர்ந்தால் மொத்த பங்களிப்பாக ரூ.60.84 லட்சம் மற்றும்‌ ஆண்டுக்கான வட்டியாக 8.25 சதவீதத்திற்கான பணம் ரூ.10.71 லட்சம் சேர்ந்து ரூ.71.55 லட்சம் வரை சேர்ந்திருக்கும்.

இது ஊதிய உச்சவரம்பு ரூ.15,000 இருந்த போது உள்ளது. ஊதிய உச்சவரம்பு ரூ.21,000 ஆக உயர்த்தப்பட்டால், EPF நிதியில் கூடுதலாக ரூ.28 லட்சம் சேர்க்கப்படும். நீங்கள் ஓய்வுபெறும் நேரத்தில், உங்கள் EPF கணக்கில் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும்.

Also Read: New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!

PF (வைப்பு நிதி) கணக்கு இருப்பை அறிந்து கொள்ள எளிய முறைகள்:

எஸ்எம்எஸ் மூலமாக: 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் EPFO ​​உறுப்பினர்கள் தங்கள் PF கணக்கு இருப்பு, சமீபத்திய பங்களிப்பைச் சரிபார்க்கலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து AN EPFOHO ENG என டைப் செய்து செய்தியை அனுப்ப வேண்டும். இங்கே ENG என்பது ஆங்கில மொழியைக் குறிக்கிறது. நீங்கள் வேறு மொழியில் தெரிந்து கொள்ள விரும்பினால், அந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களைத் தட்டச்சு செய்யவும்.

மிஸ்டு கால் மூலமாக: உங்கள் மொபைல் எண் UAN உடன் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து PF இருப்பை சரிபார்க்கலாம். இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் செய்த பிறகு, EPFO ​​இலிருந்து சில செய்திகளைப் பெறுவீர்கள். அதில் உங்களின் PF கணக்குகளின் இருப்பைக் காண்பீர்கள்.

உமாங் செயலி மூலமாக: உமாங் (UMANG) செயலியை தங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம். இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தி பயனர்கள் உரிமைகோரல்களைச் சமர்ப்பிக்கலாம். அவர்களின் EPF பாஸ்புக்கை பார்க்கலாம். அவர்களின் கோரிக்கைகளை கண்காணிக்க முடியும். இதைச் செய்ய, பயன்பாட்டில் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.

EPFO Portal மூலமாக: EPFO இணையதளத்திற்குச் சென்று, பணியாளர்கள் பிரிவில் கிளிக் செய்து, உறுப்பினர் பாஸ்புக்கைக் கிளிக் செய்யவும். உங்கள் UAN, கடவுச்சொல்லை உள்ளிட்டு PF பாஸ்புக்கை அணுகலாம். இது தொடக்க, நிறைவு இருப்பு மற்றும் பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பைக் காட்டுகிறது. எந்த PF பரிமாற்றத் தொகையும், மொத்தமுள்ள PF வட்டித் தொகையும் தெரியும்.

Also Read: Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்

பல வகையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பனீர்..!
ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவும் உணவுகள்!
உணவு சாப்பிட்ட உடன் இனிப்பு சாப்பிடலாமா?
சாப்பிட்ட உடனே டீ குடிக்கிறீங்களா? இதை படிங்க
Exit mobile version