5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பழைய எலக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகரிப்பு? புதிய பரிந்துரை- முழு விவரம்!

used electric vehicles: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சிலின் ஃபிட்மென்ட் கமிட்டியின் புதிய பரிந்துரைகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பழைய மற்றும் பயன்படுத்திய மின்சார வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி விகிதத்தை தற்போதைய 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய எலக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகரிப்பு? புதிய பரிந்துரை- முழு விவரம்!
பழைய எலக்ட்ரிக் வாகனங்கள் ஜி.எஸ்.டி
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 16 Dec 2024 15:38 PM

பழைய வாகனங்கள் விலை உயர்வு: ஜி.எஸ்.டி ஃபிட்மென்ட் கமிட்டியின் புதிய பரிந்துரைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் புதிய பரிந்துரையில், பழைய மற்றும் பயன்படுத்திய மின்சார வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டி-யை உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழைய வரி 12 சதவீதத்தில் இருந்து புதிய வரியாக 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் வழக்கமான வாகனங்களில் பாதிப்பு இருக்காது. மாறாக பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஜி.எஸ்.டி எப்படி பாதிக்கும்?

இந்திய சந்தைகளில் மின்சார வாகனங்களுக்கு புதிய மார்க்கெட் உருவாகி வருகிறது. இது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் தொடர்கிறது. இந்த வாகனங்களுக்கு தற்போது வரியாக 12 சதவீதம் விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது 18 சதவீதம் ஆக வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை உயர்வை சந்திக்கும்.

இதையும் படிங்க : உலகின் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள் யார்? முழு விவரம்

மேலும், இந்தக் கார்களின் பொருள்கள் தொடர்பான விலையும் அதிகரித்து காணப்படுகிறது. அதாவது, உள்ளீடு பாகங்கள் மீதான விலையும் கார்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கிடையில் இந்த விலை உயர்வு பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலையை மேலும் அதிகரிக்கக் கூடும். இதனால் சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலை நிச்சயமாக அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய வரி விதிப்பு விவரம்

பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி-யை அதிகரிக்க பரிந்துரைகள் வெளியாகியுள்ள நிலையில் தற்போதைய நிலையில் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1500சிசி-க்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட மின்சார கார்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது. இதில் சில புதிய பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தற்போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வரி விகிதம் 19 சதவீதம் ஆக உள்ளது. இந்த வரியைதான் 18 சதவீதம் ஆக அதிகரிக்க பரிந்துரைகள் வெளியாகியுள்ளன.

நவம்பரில் மின்சார வாகனங்கள் விற்பனை

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் எலக்ட்ரிக் வாகனம் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இதற்கிடையில் 2024 நவம்பரில் எலக்ட்ரிக் வாகன விற்பனை சரிந்துள்ளது. அந்த வகையில், எலக்ட்ரிக் விற்பனை நவம்பர் 2024 இல் 12 சதவீதம் சரிந்து 191,554 யூனிட்டுகளாக உள்ளது.

ஆனால், 2024 அக்டோபரில் எலக்ட்ரிக் விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது, அக்டோபர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன விற்பனை 219,021 யூனிட்களாக இருந்தது. இதனை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகனத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மானியம்

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சகம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சில மானியங்களை மீட்டெடுத்துள்ளது. இதனால், எலக்ட்ரிக் வாகன விற்பனை மீண்டும் அதிகரிக்கக் கூடும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : 3 ஆண்டு டெபாசிட்.. 8.05% வட்டி.. சீனியர் சிட்டிசன்கள் நோட் பண்ணுங்க!

Latest News