5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிகரெட், புகையிலை விலை உயருகிறது? பிற பொருள்களின் நிலை என்ன?

GST rise on cigarettes: சிகரெட், புகையிலை உள்ளிட்ட பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி-ஐ 35 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிகளின் படி 35 சதவீதம் வரை இந்தப் பொருள்கள் மீதான வரி உயரலாம் எனக் கூறப்படுகிறது.

சிகரெட், புகையிலை விலை உயருகிறது? பிற பொருள்களின் நிலை என்ன?
சிகரெட் மீதான ஜிஎஸ்டி உயர்வு?
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 03 Dec 2024 12:09 PM

சிகரெட் மீதான ஜி.எஸ்.டி உயர்வு: புகையிலை, சிகரெட் மீதான சரக்கு மற்றும் சேவை வரி 35 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வருகிற 21ஆம் தேதி ஜி.எஸ்.டி ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து பி.டி.ஐ வெளியிட்டுள்ள செய்தியில், “பானங்கள், சிகரெட் மற்றும் பிற புகையிலை தொடர்பான பொருட்கள் போன்ற பொருட்களின் மீதான வரியை தற்போதைய 28% இல் இருந்து 35% ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

ரெடிமேட் ஆடைகள்

முன்னதாக, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான குழு திங்கள்கிழமை கூடி முன்மொழியப்பட்ட கட்டண மாற்றங்களை இறுதி செய்துள்ளது. இது மட்டுமின்றி ஆடை மற்றும் பிற பொருட்களுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரெடிமேட் துணிகளுக்கு ரூ.1500 முதல் 5 சதவீதமும், ரூ.1500-10,000 பொருள்களுக்கு 18 சதவீதமும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் 28 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதாவது, இந்த மாற்றங்கள் வருவாயில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மொத்தம் 148 பொருட்களுக்கான வரி மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு, ரூ.1 கோடி ஈஸி ரிட்டன்!

முந்தைய முன்மொழிவுகள்- நோட்புக் வரி குறைப்பு

பேக்கேஜ் குடிநீர் (20 லிட்டர் மற்றும் அதற்கு மேல்) பாட்டில்களுக்கு ஜி.எஸ்.டி-ஐ 18%லிருந்து 5% ஆக குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.10 ஆயிரத்து உட்பட்ட சைக்கிள் மீதான ஜி.எஸ்.டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 ஆகவும், நோட் புக்ஸ் மீதான 12 சதவீத ஜி.எஸ்.டி.-ஐ 5 சதவீதமாக குறைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கைக்கடிகாரம் விலை உயர்வு

அதேபோல், ரூ.15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷூ உள்ளிட்ட பொருள்களின் ஜி.எஸ்.டி-ஐ 18 சதவீத வரியை 28 சதவீதமாகவும், ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமான கைக் கடிகாரத்தின் 18 சதவீத ஜி.எஸ்.டி.-ஐ 28 சதவீதமாக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அடுத்த ஜி.எஸ்.டி கூட்டம் டிச.21, 2024ஆம் தேதி கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒத்த பைசா வரி இல்ல.. மாதம் ரூ.91 ஆயிரம் வருமானம்: போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்!

Latest News