5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

9 காரட் தங்கம், ஹால்மார்க் முத்திரை: கிராம் எவ்வளவு தெரியுமா?

9 carat gold Hallmark : இந்தியா முழுவதும் தங்கத்தின் தேவை 20% குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 9 காரட் தங்கம் விரைவில் ஹால்மார்க் செய்யப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் மற்றும் ஹால்மார்க்கிங் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (எச்யுஐடி) எண்களை அமல்படுத்துமாறு இந்திய தர நிர்ணய பணியகத்தை (பிஐஎஸ்) தங்க வர்த்தகம் கோரியுள்ளது.

9 காரட் தங்கம், ஹால்மார்க் முத்திரை: கிராம் எவ்வளவு தெரியுமா?
தங்கம்
intern
Tamil TV9 | Published: 25 May 2024 23:36 PM

9 காரட் தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை: 9 காரட் தங்கத்திற்கான ஹால்மார்க்கிங்கை நடைமுறைப்படுத்த தங்க வர்த்தக அமைப்பான பி.ஐ.எஸ் வலியுறுத்துகிறது. மும்பையின் ஜவேரி பஜாரில் வெள்ளியின் விலை கிலோ ரூ.92 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டிஸின் அனுஜ் குப்தா வெள்ளி கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக ஆக இருக்கும் என்று கணித்துள்ளார். இதற்கிடையில், இந்தியா முழுவதும் தங்கத்தின் தேவை 20% குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 9 காரட் தங்கம் விரைவில் ஹால்மார்க் செய்யப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் மற்றும் ஹால்மார்க்கிங் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (எச்யுஐடி) எண்களை அமல்படுத்துமாறு இந்திய தர நிர்ணய பணியகத்தை (பிஐஎஸ்) தங்க வர்த்தகம் கோரியுள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதால், பலருக்கும் கட்டுப்படியாகாத வகையில் உள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 14, 18 மற்றும் 22 காரட் தங்கம் மட்டுமே எச்யுஐடி (HUID) எண்ணுடன் ஹால்மார்க் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய நிதி மையமான மும்பையின் ஜவேரி பஜாரில் வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.92 ஆயிரத்து 444 ஆக உயர்ந்தது. இது வெள்ளிக் கிழமையிலிருந்து 5.67% அதிகரித்துள்ளது. இதேபோல், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது, தற்போதைய விலை செவ்வாய்கிழமை 10 கிராம் ரூ.74 ஆயிரத்து 222 ஆக உள்ளது.

gold rate

தங்கம் விலை

பொதுத் தேர்தல் காரணமாக மும்பையில் உள்ள நகைச் சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டிருந்தது. மேலும், சுதனுகா கோசல் இன் ஈடி(ET)அறிக்கையின்படி, முன்னணி வர்த்தக அமைப்பான இந்தியா புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA)யின் பிரதிநிதிகள் செவ்வாயன்று பிஐஎஸ் அதிகாரிகளுடன் 9 காரட் தங்கத்திற்கான ஹால்மார்க்கிங் மற்றும் எச்யுஐடி எண்களின் சிக்கலைத் தீர்க்க ஒரு சந்திப்பை நடத்தினர்.

ஐபிஜேஏ (IBJA) இன் தேசிய செயலாளரான சுரேந்திர மேத்தா, “தங்கத்தின் விலை விஷம்போல் ஏறுகிறது. மக்கள் இதனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அதை மனதில் வைத்து, 9 காரட் நகைகளுக்கு ஹால்மார்க்கிங் அனுமதிக்க இன்று அதிகாரிகளை சந்தித்தோம். இந்திய ரிசர்வ் வங்கி, இறையாண்மை தங்கப் பத்திரங்களின் விலையை நிர்ணயிக்கும் போது ஐபிஜேஏ-ஐ அங்கீகரிக்கிறது.

ஒன்பது கேரட் தங்கத்தின் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.27 ஆயிரத்து 740 ஆக உள்ளது. இந்த விலைக்கு மேல் கூடுதலாக 3% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது” என்றார். 9 காரட் தங்க நகைகளுக்கு ஹால்மார்க்கிங் அனுமதிக்கப்பட்டால், மக்கள் தங்கம் வாங்கும் மதிப்பை பெறுவார்கள். மேலும் இதே நிலை நீடித்தால், வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

gold rate

தங்கம்

கடந்த ஐந்து மாதங்களில், தங்கத்தின் விலை ஏறக்குறைய 17% உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் சீனாவின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் தங்கத்தின் விலை கடுமையாக தூண்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்கத்தின் விலை அடுத்த ஆண்டு அட்சய திருதியைக்குள் 10 கிராமுக்கு ரூ. 80,000-85,000 வரை விலை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், பிஜேஏ-ஐச் சேர்ந்த மேத்தா, தங்கத்தின் விலை உயர்வானது தேவையை எதிர்மறையாகப் பாதிக்கிறது; வழக்கமாக வாங்குபவர்கள் விலகி இருக்கிறார்கள். திருமணத்தின் அடிப்படையிலான தேவை மட்டுமே தற்போது உள்ளது. ஆதலால் நாட்டில் தங்கத்தின் தேவை 20% குறைந்துள்ளது” என்றார்.

Latest News