5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

HDFC : FD திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி.. எவ்வளவு தெரியுமா?

Fixed Deposit | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். 

HDFC : FD திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்திய ஹெச்டிஎஃப்சி.. எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 14 Dec 2024 08:11 AM

நிலையான வைப்பு நிதி என்பது ஒரு வகையான சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டம் பிரபலமாக FD (Fixed Deposit) என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடம் மிகவும் பிரபலமாக இருக்க காரணம், அதன் வட்டி விகிதம் மற்றும் கொள்கைகள் தான். இந்த நிலையான வைப்பு நிதி திட்டம் வங்கிகள் மட்டுமன்றி, அஞ்சலங்கள் மூலம் அரசு சார்பிலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெறலாம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி தனது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : PF Claim : உங்கள் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

HDFC வங்கி செயல்படுத்தும் FD திட்டங்கள்

ஹெச்டிஎஃப்சி வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த தொகை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி செயல்படுத்தி வரும் எஃப்டி திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 4.75 சதவீதம் முதல் 7.40 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதெபோல, மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதம் முதல் 7.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Card : டிச.14 தான் கடைசி தேதி.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!

HDFC வங்கியின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்

7 முதல் 6 மாதங்கள் வரையிலான திட்டங்கள்

  1. 7 – 14 நாட்களுக்கான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 4.75%, மூத்த குடிமக்களுக்கு 5.25% வட்டி வழங்கப்படுகிறது.
  2. 15 – 29 நாட்களுக்கான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 4.75%, மூத்த குடிமக்களுக்கு 5.25% வட்டி வழங்கப்படுகிறது.
  3. 30 – 45 நாட்களுக்கான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 5.50%, மூத்த குடிமக்களுக்கு 6% வட்டி வழங்கப்படுகிறது.
  4. 46 – 60 நாட்களுக்கான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 5.75%, மூத்த குடிமக்களுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது.
  5. 61 – 89 நாட்களுக்கான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6%, மூத்த குடிமக்களுக்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது.
  6. 90 – 6 மாதங்கள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.50%, மூத்த குடிமக்களுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Recurring Deposit : மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.1 லட்சம் பெறலாம்.. SBI-ன் அசத்தல் திட்டம்!

6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள்

  1. 6 மாதங்கள் 1 நாள் – 9 மாதங்கள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.85%, மூத்த குடிமக்களுக்கு 7.35% வட்டி வழங்கப்படுகிறது.
  2. 9 மாதங்கள் 1 நாள் – 1 ஆண்டு வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 6.75%, மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டி வழங்கப்படுகிறது.
  3. 1 ஆண்டு – 15 மாதங்கள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.40%, மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டி வழங்கப்படுகிறது.
  4. 15 மாதங்கள் – 18 மாதங்கள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.05%, மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி வழங்கப்படுகிறது.
  5. 18 மாதங்கள் – 21 மாதங்கள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி வழங்கப்படுகிறது.
  6. 2 ஆண்டுகள் – 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி வழங்கப்படுகிறது.
  7. 3 ஆண்டுகள் – 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி வழங்கப்படுகிறது.
  8. 5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7%, மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி வழங்கப்படுகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News