5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SBI மியூச்சுவல் ஃபண்டு: மாதம் ரூ.20000 முதலீடு செய்தால் ரூ.32.61 லட்சம் தேடி வரும்!

Best SBI Mutual funds: எஸ்.பி.ஐ கான்ட்ரா தீமில் முதலீடு செய்யும் ஃபண்ட் ஐந்தாண்டு காலத்தில் 34.45 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. பிஎஸ்இ 500 டிஆர்ஐக்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட இந்த ஃபண்டின் ஏயூஎம் ரூ.29 ஆயிரத்து 586 கோடி ஆகும். அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் மதிப்பு ரூ.381.16 ஆகும். இந்த ஃபண்டின் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ. 500 ஆகும், அதே சமயம் அதன் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ. 5,000 ஆகும்.

SBI மியூச்சுவல் ஃபண்டு: மாதம் ரூ.20000 முதலீடு செய்தால் ரூ.32.61 லட்சம் தேடி வரும்!
எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 12 Jun 2024 08:18 AM

பெஸ்ட் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுகள்: சந்தையில் உள்ள பல்வேறு முன்னணி மியூச்சுவல் ஃபண்டுகளைப் போலவே, எஸ்.பி.ஐ.யும் நிறைய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை இயக்குகிறது. அவற்றில் சில கடந்த சில ஆண்டுகளில் அதிக மொத்தத் தொகை மற்றும் எஸ்ஐபி வருமானத்தை அளித்துள்ளன. ஐந்தாண்டுகளின் செயல்திறனைப் பார்த்தால், எஸ்.பி.ஐ பி.எஸ்.யூ நிதி, எஸ்.பி.ஐ இன்ஃப்ரா ஃபண்டு (உள்கட்டமைப்பு நிதி) மற்றும் எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்டு ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்டவைகளாக உள்ளன. இந்த நிலையில், ஒவ்வொரு ஃபண்டுவிலும் ரூ.10,000 மற்றும் ரூ.20,000 மாதாந்திர எஸ்ஐபிகள் என்னென்ன வழங்கியுள்ளன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ பி.எஸ்.யூ ஃபண்டு

ஈக்விட்டி பி.எஸ்.யூ ஃபண்டு ஐந்து ஆண்டுகளில் 41.30 சதவீத வருடாந்திர எஸ்ஐபி வருமானத்தை (XIRR) வழங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் (BSE 500) இந்த நிதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) ரூ 2 ஆயிரத்து 352 கோடி ஆகும். அதன் நிகர சொத்து மதிப்பு ரூ 35.09 ஆகும். ஜனவரி 2013 இல் தொடங்கப்பட்ட ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.500 ஆகும். அதே சமயம் ஃபண்டில் குறைந்தபட்ச மொத்தத் தொகை ரூ 5,000 ஆகும். அதன் முதலீட்டில் 90.60 சதவிகிதம் பங்குகளில் 44.68 சதவிகிதம் பெரிய கேப்களிலும், 24.78 மிட் கேப்களிலும், 21.14 சதவிகிதம் ஸ்மால் கேப்களிலும் உள்ளது.
எஸ்பிஐ, பவர் கிரிட், என்டிபிசி மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் ஆகியவை அதன் போர்ட்ஃபோலியோவில் முதன்மையான பங்குகள் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.10,000 எஸ்ஐபி அல்லது மொத்த முதலீடு ரூ.6 லட்சம், ரூ.16.30 லட்சமாக மாறியுள்ளது. அதே ஃபண்டில் ரூ.20,000 எஸ்ஐபி அல்லது ரூ.12 லட்சம் முதலீடு, ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் ரூ.32.61 லட்சத்தை வழங்கியுள்ளது.

எஸ்.பி.ஐ இன்ஃப்ரா ஃபண்டு

இந்த நிதியானது, ஐந்தாண்டு காலத்தில் 34.77 சதவீத வருடாந்திர எஸ்ஐபி வருமானத்தை வழங்கிய துறைசார் உள்கட்டமைப்பு நிதியாகும். இதன் ஏயுஎம் ரூ.2,794 கோடி, அதன் என்ஏவி மதிப்பு ரூ.51.76 ஆகும். நிஃப்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டிஆர்ஐக்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட, 11 வருட பழைய ஃபண்டின் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ. 500 ஆகும், அதே சமயம் அதன் குறைந்தபட்ச மொத்தத் தொகை ரூ. 5,000 ஆகும்.
ஃபண்டின் 88.85 சதவீத முதலீடுகள் ஆர்ஐஎல், பார்தி ஏர்டெல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் பங்குகளில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.10,000 எஸ்ஐபி ரூ.14.02 லட்சமாக மாறியுள்ளது. அதே ஃபண்டில் ரூ.20,000 எஸ்ஐபி அல்லது ரூ.12 லட்சம் முதலீட்டிற்கு, ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் ரூ.28.05 லட்சத்தை வழங்கியுள்ளது.

எஸ்பிஐ கான்ட்ரா ஃபண்டு

எஸ்.பி.ஐ கான்ட்ரா தீமில் முதலீடு செய்யும் ஃபண்ட் ஐந்தாண்டு காலத்தில் 34.45 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. பிஎஸ்இ 500 டிஆர்ஐக்கு எதிராக பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட இந்த ஃபண்டின் ஏயூஎம் ரூ.29 ஆயிரத்து 586 கோடி ஆகும். அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் மதிப்பு ரூ.381.16 ஆகும். இந்த ஃபண்டின் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ. 500 ஆகும், அதே சமயம் அதன் குறைந்தபட்ச மொத்த முதலீடு ரூ. 5,000 ஆகும்.
ஃபண்டின் 88.87 சதவீத முதலீடுகள் பங்குகளில் 44.52 சதவீதம் லார்ஜ் கேப்களிலும், 29.25 சதவீதம் மிட் கேப்களிலும், 15.09 சதவீதம் ஸ்மால் கேப்களிலும் உள்ளன. ஹெச்டிஎஃப்சி வங்கி, கெயில் (இந்தியா), எஸ்பிஐ மற்றும் நிஃப்டி வங்கி ஆகியவை அதன் முக்கிய பங்குகளாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.10,000 எஸ்ஐபி-யில் ரூ.13.92 லட்சமாக மாறியுள்ளது. அதே ஃபண்டில் ரூ.20,000 எஸ்ஐபி அல்லது ரூ.12 லட்சம் முதலீடு, ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் ரூ.27.84 லட்சத்தை வழங்கியுள்ளது.

(இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ளவும்.)

இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: புதிய வீதத்தை செக் பண்ணுங்க!

Latest News