5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எஃப்.டி முதலீடுக்கு 9% வட்டி.. இந்த 9 வங்கிகளை ஒப்பிட்டு பாருங்க!

Best ixed deposit Rates: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 8 முதல் 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் 14 வங்கிகளின் லிஸ்ட் இங்குள்ளது. பொதுவாக, ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் பூஜ்ய ரிஸ்க் பட்டியலில் வருகின்றன.

எஃப்.டி முதலீடுக்கு 9% வட்டி.. இந்த 9 வங்கிகளை ஒப்பிட்டு பாருங்க!
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 01 Dec 2024 11:45 AM

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9% வட்டி: எஃப்.டி அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் என்பது பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி-கள் வழங்கும் ஒரு வகையான கால முதலீடு ஆகும். இந்தத் திட்டத்தில், பொதுவாக சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. இந்த டெபாசிட்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்படும். இதில் முதலீட்டு தொகைய கணக்கீடுவது இக்காலக்கட்டத்தில் மிகவும் எளிதானதாக பார்க்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் பல்வேறு எஃப்.டி கால்குலேட்டர்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் எஃப்.டி வட்டியை எளிதில் தெரிந்துக்கொள்ளலாம். எனினும், வங்கியின் அதிகாரப்பூர்வ கால்குலேட்டர்களை பயன்படுத்துவது நல்லது.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் வட்டி எவ்வாறு கணக்கீடப்படுகிறது?

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பொறுத்தவரை வட்டி, காலம் மற்றும் டெபாசிட் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி கணக்கீடப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பொதுவாக பொதுத்துறை வங்கிகளை காட்டிலும், ஸ்மால் .ஃபைனான்ஸ் வங்கிகள் சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கின்றன.

உயர் வட்டி எஃப்டி வங்கி திட்டங்கள்

ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 18 மாத எஃப்.டி திட்டங்களுக்கு 8 சதவீதம் உயர் வட்டி வழங்குகிறது. அதேபோல் ஓராண்டு திட்டத்துக்கு 7.5 சதவீதம், 3 ஆண்டு திட்டத்துக்கு 7.50 சதவீதம், 5 ஆண்டு திட்டத்துக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றன.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 444 நாள்கள் எஃப்.டி திட்டத்துக்கு அதிகப்பட்சமாக 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 1 ஆண்டு எஃப்.டி திட்டத்துக்கு 8.10 சதவீதம் வட்டி, 3 ஆண்டு திட்டத்துக்கு 8 சதவீதம் வட்டி, 5 ஆண்டு திட்டத்துக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இதையும் படிங்க : 8.20 சதவீதம் வரை வட்டி.. டாப் 4 போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள் தெரியுமா?

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 546 நாள்கள் மற்றும் 1111 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு அதிகப்பட்சமாக 9 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இதில் ஓராண்டுக்கு 7 சதவீதம், 3 ஆண்டுக்கு 9 சதவீதம், 5 ஆண்டுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியை பொறுத்தமட்டில் 1001 நாள்கள் எஃப்.டிக்கு 9 சதவீதம் வட்டி வழங்கப்படும். தொடர்ந்து, ஓராண்டு எஃப்.டிக்கு 7.85 சதவீதம், 3 ஆண்டு 8.15 சதவீதம், 5 ஆண்டுக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் மற்றும் 1500 நாள்கள் எஃப்.டிக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த வங்கியை பொறுத்தமட்டில் ஓராண்டு எஃப்.டிக்கு அதிகப்பட்சமாக 8 சதவீதம் வட்டி வழங்குகிறது. தொடர்ந்து, 3 மற்றும் 5 ஆண்டுகள் முறையே 8.50 சதவீதம் மற்றும் 7.75 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 12 மாத முதலீடுக்கு அதிகப்பட்சமாக 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. தொடர்ந்து, 1, 3, 5 ஆண்டுகள் முறையே முதலீடுக்கு 8.25 சதவீதம், 7.20 சதவீதம் மற்றும் 7.20 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.60 சதவீதம் வட்டி வழங்குகிறது. மேலும், இந்த வங்கி ஓராண்டு எஃப்.டிக்கு 8.05 சதவீதமும், 3 ஆண்டுக்கு 8.60 சதவீதமும், 5 ஆண்டுக்கு 8.25 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

ஜனா ஸ்மால் வங்கி

ஜனா ஸ்மால் வங்கி 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதில் ஓராண்டுக்கு 8.25 சதவீதம் வட்டியும், 3 ஆண்டுக்கு 8.25 சதவீதம் வட்டியும், 5 ஆண்டுக்கு 8.20 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : இவ்ளோ கம்மி விலையில் ஹோம் லோனா? நீங்க வீடு வாங்குவது சத்தியம்!

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

இ.எஸ்.ஏ.எஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிகப்பட்சமாக 8.25 சதவீதம் வட்டியை 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் இடையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வழங்குகிறது.
இந்த வங்கியில் 1 ஆண்டு எஃப்.டிக்கு 6 சதவீதம் வட்டியும், 3 ஆண்டுகள் எஃப்.டிக்கு 6.75 சதவீத வட்டியும், 5 ஆண்டுகள் எஃப்.டிக்கு 6.25 சதவீத வட்டியும் வழங்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கி காப்பீடு

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில், ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டரும் அதிகபட்சம் ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம்) வரை அவர் வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டித் தொகைக்கு ஒரே உரிமையில் காப்பீடு செய்யப்படுகிறார். அதிகப்படியான முதலீடுகளுக்கு வங்கி அதிகாரியை தொடர்புக் கொண்டு முழுவதும் அறிந்துக் கொள்வது நல்லது.

(பொறுப்பு துறப்பு: முதலீடு தொடர்பான லாப நஷ்டங்களுக்கு முதலீட்டாளரே முழு பொறுப்பு வகிக்கிறார். முதலீடுக்கு முன் செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை தொடர்புக் கொள்வது நல்லது. பயனரின் எந்தவொரு லாப, நஷ்டங்களுக்கும் டி.வி9 தமிழ் பொறுப்பேற்காது.)

Latest News