10 ஆண்டுகளில் 27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்! | Here are the Best Small Cap Mutual Fund Schemes Tamil news - Tamil TV9

10 ஆண்டுகளில் 27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

Small cap Mutual Funds : மொத்த ஈக்விட்டி சொத்துகளின் சதவீதமாக, இந்த காலகட்டத்தில் ரொக்கம் 37 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.42 சதவீதமாக உள்ளது. இதில், பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் அதன் சொத்துக்களில் 14.8 சதவீதமான ₹9,457 கோடியை அதிகபட்ச ரொக்கமாக வைத்திருந்தது.

10 ஆண்டுகளில் 27 சதவீதம் வரை ரிட்டன்: பெஸ்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்

Published: 

26 May 2024 14:45 PM

ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்: கடந்த சில மாதங்களில் உயர்ந்து வரும் மதிப்பீடுகளுக்கு மத்தியில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில், ஏப்ரல் மாத இறுதியில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளால் ஒதுக்கப்பட்ட மொத்தப் பணம் ரூ.1.34-லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இருந்ததை விட 22 சதவீதம் அதிகமாகும். இந்தத் தகவலை பிஸ்டம் ரிசர்ச் தரவை மேற்கோள் காட்டி தனியார் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், மொத்த ஈக்விட்டி சொத்துகளின் சதவீதமாக, இந்த காலகட்டத்தில் ரொக்கம் 37 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.42 சதவீதமாக உள்ளது. இதில், பராக் பரிக் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் அதன் சொத்துக்களில் 14.8 சதவீதமான ₹9,457 கோடியை அதிகபட்ச ரொக்கமாக வைத்திருந்தது. ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளக்ஸி ஃபண்டு (HDFC Flexi Cap Fund), ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் ப்ளூசிப் (ICICI Pru Bluechip), எஸ்.பி.ஐ கான்ட்ரா (SBI Contra), ஹெச்.டி.எஃப்.சி மிட் கேப் ஆபர்சியூனிட்டிஸ் (HDFC Mid-Cap Opportunities) மற்றும் ஐ.சி.ஐ.சி.ழு புரூ வேல்யூ டிஸ்கவரி ஆகியவை ₹5,000 கோடிக்கும் அதிகமான ரொக்கத்தை வைத்துள்ளன.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த 5 ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ ஸ்மால் கேப் ஃபண்டு

எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 10 ஆண்டு கால இடைவெளியில் ரூ.20,000 மாத முதலீட்டை ரூ.76.27 லட்சமாக மாற்றியது. இந்த ஸ்மால்கேப் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ.20,000 முதலீடு செய்தால், அவர்கள் 10 வருடத்தில் 22.05 சதவீதம் வட்டி வருமானமாக பெற்றிருப்பார்.

ஹெச்.எஸ்.பி.சி ஸ்மால் கேப் ஃபண்டு

இந்த ஸ்மால்கேப் ஃபண்ட், 10 ஆண்டு கால இடைவெளியில் ரூ.20,000 மாத முதலீட்டை ரூ.77.54 லட்சமாக மாற்றியது. மே 15, 2014 இல் தொடங்கும் இந்த ஸ்மால்கேப் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ. 20,000 போட்டால், அவர்கள் 10 வருட காலத்தில் 22.36% சம்பாதித்திருப்பார்கள்.

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டு

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 10 ஆண்டு கால இடைவெளியில் ரூ.20,000 மாத முதலீட்டை ரூ.1 கோடியாக மாற்றியது. மே 15, 2014 இல் தொடங்கும் இந்த ஸ்மால்கேப் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ.20,000 முதலீடு செய்தால், 10 வருட காலத்தில் 27.24% ஐப் பெற்றிருப்பார்கள்.

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்டு, நிர்வகிக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் மிகப்பெரிய ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகும். இது, 10 ஆண்டு கால இடைவெளியில் ரூ.20,000 மாதாந்திர முதலீட்டை ரூ.91.78 லட்சமாக மாற்றியது. இந்த ஸ்மால்கேப் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ.20,000 முதலீடு செய்தால் 10 வருட காலத்தில் 25.49% சம்பாதித்திருப்பார்கள்.

ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்டு

ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால் கேப் ஃபண்டு 10 ஆண்டு கால இடைவெளியில் மாத முதலீடு ரூ.20,000 முதல் ரூ.73.53 லட்சம். மே 15, 2014 இல் தொடங்கும் இந்த ஸ்மால்கேப் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் மாதந்தோறும் ரூ. 20,000 முதலீடு செய்தால், அவர்கள் 10 வருட காலத்தில் 21.37% சம்பாதித்திருப்பார்கள்.

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டவை. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு, சரியான முதலீட்டு ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று அதன் பின்னர் முதலீடு செய்வது நல்லது.

இதையும் படிங்க : மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்: SBI வங்கியில் என்ன வட்டி?

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?