5 ஆண்டுகளில் 35% வருவாய்: இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் தெரியுமா? | Here are the ELSS mutual funds that have given the best returns in the last 5 years Tamil news - Tamil TV9

5 ஆண்டுகளில் 35% வருவாய்: ELSS ஃபண்டுகள் தெரியுமா?

Updated On: 

17 Jun 2024 09:10 AM

Best Return ELSS Mutual Funds: டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் (DSP ELSS) வரி சேமிப்பு நிதி கடந்த 5 ஆண்டுகளில் 21.89 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. பந்தன் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நிதி கடந்த 5 ஆண்டுகளில் 21.96 சதவீதம் வட்டி வருவாய் அளித்துள்ளது. மோதிலால் ஓஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 23.06 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

5 ஆண்டுகளில் 35% வருவாய்: ELSS ஃபண்டுகள் தெரியுமா?

பெஸ்ட் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள்

Follow Us On

இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்: ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ஈஎல்எஸ்எஸ்) என்பது ஒரு வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். இ.எல்.எஸ்.எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மூன்று வருட கட்டாய லாக்-இன் காலத்துடன் வருகின்றன. மேலும், இந்த இ.எல்.எஸ்.எஸ் (ELSS) மியூச்சுவல் ஃபண்டுகள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி விலக்கை அளிக்கின்றன. இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 35 சதவீதம் வரை வட்டி வருவாய் கொடுத்துள்ளன. அந்த வகையில், இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் அளித்துள்ள தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் ஏழு இ.எல்.எஸ்.எஸ் நிதிகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் (DSP ELSS) வரி சேமிப்பு நிதி

டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் (DSP ELSS) வரி சேமிப்பு நிதி கடந்த 5 ஆண்டுகளில் 21.89 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. அதன் பெஞ்ச்மார்க் வருவாய் அதே காலக்கட்டத்தில் 18.65 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் அளித்துள்ள தகவலின்படி இந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் நிர்வாகத்தில் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ 15,745.35 கோடி ஆகும்.

பந்தன் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நிதி

பந்தன் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நிதி கடந்த 5 ஆண்டுகளில் 21.96 சதவீதம் வட்டி வருவாய் அளித்துள்ளது. இதன் பி.எஸ்.இ-500 ரிட்டன் குறியீடு 18.85 சதவீதம் ஆக உள்ளது. ரூ.6700.60 கோடி சொத்துக்கள் இந்தப் ஃபண்டுவின் நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

ஜே.எம். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு

ஜே.எம். இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 22.34 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்தப் ஃபண்டுவின் நிர்வாகத்தின் கீழ் ரூ.150.12 கோடி சொத்துக்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

மோதிலால் ஓஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டு

மோதிலால் ஓஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 23.06 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து (AUM) ரூ 3,543.14 கோடி மற்றும் அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) தற்போது ரூ 52.0744 ஆக உள்ளது.

எஸ்.பி.ஐ லாங் டெர்ம் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு

எஸ்.பி.ஐ லாங் டெர்ம் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 23.82 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இதன், பெஞ்ச்மார்க், BSE 500 மொத்த வருவாய் குறியீட்டை விட அதிகமாக உள்ளது, இது அதே காலகட்டத்தில் 18.85 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டில் ரூ 24,918.2 கோடி நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து (AUM) உள்ளது. அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) தற்போது ரூ 439.4787 ஆக உள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு

பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 27.5 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இது அதன் பெஞ்ச்மார்க், பி.எஸ்.இ 500 மொத்த வருவாய் குறியீட்டை விட அதிகமாக உள்ளது, இது அதே காலகட்டத்தில் 18.85 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து (AUM) ரூ 1,367.94 கோடி மற்றும் அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) தற்போது ரூ 189.98 ஆக உள்ளது.

குவாணட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு

குவாணட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு கடந்த ஐந்து ஆண்டுகளில் 34.86 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. அதே காலக்கட்டத்தில் 18.65 சதவீதம் உயர்ந்து, அதன் முக்கிய குறியீடான நிஃப்டி 500 மொத்த வருவாய் குறியீட்டை விட அதிகமாக உள்ளது. இந்த நிதியானது ரூ.10,034.07 கோடி நிர்வாகத்தின் கீழ் (AUM) சொத்துக்களைக் கொண்டுள்ளது. இதன் நிகர சொத்து மதிப்பு (NAV) தற்போது ரூ.431.9684 ஆக உள்ளது.

Disclaimer: இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டுக்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக தெரிந்துகொள்ளவும்.

இதையும் படிங்க : வட்டியாக மட்டும் ரூ.4.5 லட்சம் வருமானம்.. இந்தப் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் தெரியுமா?

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version