5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.250 முதல் முதலீடு.. இந்தியாவின் டாப் 3 அஞ்சலக திட்டங்கள் தெரியுமா?

Post office savings schemes: போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிறு சேமிப்பை ஊக்குவிப்பதோடு, வருமான வரி தாக்கலுக்கும் பயன்படுகின்றன. ஆம், பெரும்பாலான அஞ்சலக திட்டங்கள் வரி சேமிப்பின் கீழ் வருகின்றன.

ரூ.250 முதல் முதலீடு.. இந்தியாவின் டாப் 3 அஞ்சலக திட்டங்கள் தெரியுமா?
டாப் 3 அஞ்சலக திட்டங்கள்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 03 Dec 2024 13:08 PM

அஞ்சலகத்தின் 3 டாப் திட்டங்கள் : இந்திய நிதி அமைச்சகம் 3 மாதங்களுக்கு ஒருமுறை, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விகிதங்களை அறிவிக்கிறது. எனினும், கடந்த பல காலாண்டுகளாக இந்த வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. இது முதலீட்டாளர்கள் ஸ்திரமான முடிவெடுக்க காரணமாக அமைகிறது. தற்போது, இந்தச் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டு வட்டி விகிதங்கள் அமலில் உள்ளன. இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றவில்லை. இதனால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையில் சில அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கி எஃப்.டி-ஐ விட அதிக வட்டி வழங்குகின்றன.

உயர் வட்டி அஞ்சலக திட்டங்கள்

அதாவது, சில அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு 8.2% வரை வட்டி விகிதங்களுடன் வருகின்றன. மேலும், இதில் பல்வேறு நன்மைகளும் வருகின்றன. இந்த அஞ்சல் அலுவலகத் திட்டங்களில் பெரும்பாலானவை வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகின்றன.

எனினும், முதலீட்டாளர்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், இந்த அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வரி தாக்கங்களை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் நாம் முக்கிய அஞ்சலக திட்டங்கள் குறித்து விவாதிக்கலாம்.

இதையும் படிங்க : ஒத்த பைசா வரி இல்ல.. மாதம் ரூ.91 ஆயிரம் வருமானம்: போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்!

போஸ்ட் ஆபீஸ் எஃப்.டி

போஸ்ட் ஆபீஸ் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல வட்டி விகிதங்களை வழங்குகின்றன. குறிப்பாக, ஓராண்டு வைப்புத்தொகைக்கு ஆண்டுதோறும் 6.9% சதவீதம் வட்டி வழங்குகின்றன.

தொடர்ந்து, இரண்டு ஆண்டு வைப்புத்தொகை 7%, மூன்று ஆண்டு வைப்புத்தொகை 7.1% மற்றும் 5 ஆண்டு வைப்புத் தொகைக்கு 7.5% அளிக்கின்றன.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதல் இரு பெண் குழந்தைகளில் பெயரில் சேமிப்பை தொடங்கலாம்.
இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச தொகையான ரூ.250-ல் கணக்கைத் தொடங்கலாம். மேலும், ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தலாம்.

இந்தத் திட்டத்தில் தற்போது 8.2% வட்டி வழங்கப்படுகிறது. கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செல்லுபடியாகும். எனினும், அதிகபட்ச வைப்பு காலம் 15 ஆண்டுகள்தான்.

பி.பி.எஃப் திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எஃப் திட்டம் என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு ஆகும். இது சிறு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை அரசாங்க ஆதரவு திட்டத்தில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது.
இத்திட்டத்தில் தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கும் வழங்குகிறது.

இதையும் படிங்க : கனரா வங்கி FD வட்டி தாறுமாறு உயர்வு.. புதிய வீதம் தெரியுமா?

Latest News