FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்! - Tamil News | Here is a November month interest rates of private banks for Fixed deposit schemes | TV9 Tamil

FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

November | பொதுமக்கள் சேமிப்பதற்காகவே பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல பலனை பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் நிலையான வைப்புநிதி திட்டம்.

FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Nov 2024 17:29 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும். சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிதி பற்றாக்குறை அற்ற வாழ்க்கையை வாழ முடியும். எனவே அனைவரும் சேமிப்பதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்கள் சேமிப்பதற்காகவே பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல பலனை பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு தனியார் வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : கோடி கோடியாக பணம்.. உலகின் முதல் டிரில்லியனர் யார்? லிஸ்டில் இருக்கும் 2 இந்தியர்கள்!

தனியார் வங்கிகளின் வழங்கும் வட்டி விகிதங்கள்

நவம்பர் மாதத்தில் நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆக்சிஸ் வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி 6.70 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பந்தன் வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பந்தன் வங்கி 8.05 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பந்தன் வங்கி 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பந்தன் வங்கி 8.05 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : FD Interest Rate : நிலையான வைப்புநிதி திட்டம்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய வங்கிகள்!

டிசிபி வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு டிசிபி வங்கி 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பந்தன் வங்கி 7.55 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பந்தன் வங்கி 7.40 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 6.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Small Savings : சிறுசேமிப்பு திட்டங்களில் சிறந்தது எது.. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

இண்டஸ்லேண்ட் வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இண்டஸ்லேண்ட் வங்கி 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இண்டஸ்லேண்ட் வங்கி 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இண்டஸ்லேண்ட் வங்கி 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஆர்பிஎல் வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆர்பிஎல் வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆர்பிஎல் வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு ஆர்பிஎல் வங்கி 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்.. பட்டியல் இதோ!

எஸ் பேங்க்

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ் பேங்க் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ் பேங்க் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எஸ் பேங்க் 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?
தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவலாமா?
ஆரோக்கியமாக வாழ தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்..!
இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி செய்த டாப் 7 சாதனைகள்..!