5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

PAN 2.0 : பான் 2.0.. பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா?.. அரசு கூறுவது என்ன?

Central Government | பான் 2.0 திட்டம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இது வரி செலுத்துவோருக்கு எளிதாக மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 1,435 கோடி செலவு செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் பல்வேறு நன்மைகளை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

PAN 2.0 : பான் 2.0.. பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா?.. அரசு கூறுவது என்ன?
மமதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 30 Nov 2024 10:54 AM

இந்தியாவில் பான் 2.0 என்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் அதிநவீன வசதி கொண்ட புதிய அட்டை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த நிலையில், இந்த பான் 2.0 குறித்து பொதுமக்கள் இடையே பல்வேறு கருத்துகளும், கேள்விகளும் நிலவி வருகிறது. அதாவது, தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பான் கார்டுகள் செல்லாதா என்றும், அனைவரும் கட்டாயம் புதிய பான் கார்டுகளை வாங்க வேண்டுமா என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் இந்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், இந்த பான் 2.0 என்றால் என்ன, அதனை பெறுவது எப்படி மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar Card : ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் அட்டைகளை இணைக்கலாம்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

இந்திய குடிமக்களுக்கு பான் அட்டை ஏன் அவசியம்?

இந்திய குடிமக்களுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. காரணம் இந்திய குடிமக்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது. வருமான வரிக்கும் பான் கார்டுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேள்விகள் எழலாம். வருமான வரிக்கும் பான் கார்டுக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. பான் கார்டு (PAN – Permanent Account Number) என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் எந்தவிதமான பணப் பரிவர்த்தனை செய்தாலும் அது பான் எண்ணில் பதிவாகிவிடும். இவ்வாறு பதிவு செய்யப்படுவதன் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனைகள் எதுவும் நடக்கப்படாமல் தடுக்கப்படும். ஒருவேளை ஒரு நபர் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்கிறார் என்றாலோ, அவருக்கு வருமானம் அதிக அளவு வருகிறது என்றாலோ பான் கார்டு மூலம் அவருக்கு வருமான வரி விதிக்கப்படும். அதுமட்டுமன்றி அந்த நம்பர் வருமான வரி செலுத்தி விட்டாரா என்பதையும் பான் கார்டு மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். எனவே ஊழல்கள் மற்றும் மோசடிகளை தடுக்க பான் கார்டு முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ration Card : 5.8 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து.. டிசம்பர் 31-க்குள் இத பண்ணுங்க.. இல்லனா உங்க அட்டையும் ரத்து செய்யப்படலாம்!

பான் 2.0 என்றால் என்ன?

பான் 2.0 திட்டம் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இது வரி செலுத்துவோருக்கு எளிதாக மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 1,435 கோடி செலவு செய்துள்ளது. இந்த திட்டம் மூலம் பொதுமக்கள் பல்வேறு நன்மைகளை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது முதல் இருந்தே பொதுமக்களுக்கு அது குறித்து பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் நிலவி வருகிறது. அதற்கான விளக்கங்களை பின்வருமாறு பார்க்கலாம்.

பான் 2.0 குறித்த கேள்விகளும் அதன் பதில்களும்

பான் கார்டு செல்லுபடியாகாதா?

பான் 2.0 வாங்கினால் பழைய பான் கார்டு செல்லுபடியாகாதா என்று மக்கள் மத்தியில் கேள்வி உள்ளது. பான் அட்டையின் தொழில்நுட்பம் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, பான் எண் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே பொதுமக்கள் அதை குறித்து கவலைப்பட வேண்டாம் என்று மத்திய அமைச்சடர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.

புதிய பான் அட்டை வழங்கப்படுமா?

பான் 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பான் கார்டு வழங்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. பான் 2.0 திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு நிச்சயம் புதிய பான் கார்டு வழங்கப்படும்.

கட்டணம் செலுத்த வேண்டுமா?

பான் 2.0 அரசின் புதிய திட்டம் என்பதால் இது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே புதிய பான் கார்டு வழங்க பொதுமக்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ration Card : பண்டகமில்லா குடும்ப அட்டை.. ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

பான் 2.0 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News