Aadhaar Card : மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன.. அதை ஏன் பயன்படுத்த வேண்டும்.. முழு விவரம் இதோ!

Masked Aadhaar | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமனக்களுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Aadhaar Card : மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன.. அதை ஏன் பயன்படுத்த வேண்டும்.. முழு விவரம் இதோ!

ஆதார் கார்டு (Photo Credit : Priyanka Parashar/Mint via Getty Images)

Updated On: 

30 Sep 2024 17:19 PM

மாஸ்க்டு ஆதார் கார்டு : இந்தியர்களின் மிக முக்கியமான ஆதாரமாக ஆதார் கார்டு உள்ள நிலையில், மாஸ்க்டு ஆதார் கார்டும் வழங்கப்படுகிறது. இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் இதன் பயன்கள் என்னவென்று தெரியாததால் பெரும்பாலான பொதுமக்கள் இந்த மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில், மாஸ்க்டு ஆதார் கார்டு என்றால் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன, அதனை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Aadhar Card Update: செம்ம சான்ஸ்.. ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. சீக்கிரம் வேலைய முடிங்க!

ஆதார் கார்டு ஏன் அவசியம் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமனக்களுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணம் ஆகும். ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக மட்டுமன்றி, முக்கிய முகவரி சான்றிதழாகவும் உள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் சேறுவது, மருத்துவம், பயணம், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது என அனைத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் பல விஷயங்களை செய்யவே முடியாத நிலை உள்ளது. இத்தகைய முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் ஆகும். ஆதார் கார்டில் நமது முக்கியமான தனிப்பட்ட விவரங்கள் உள்ளதால் அவை திருடப்படும் பட்சத்தில் அது நமக்கு மிகவும் ஆபத்தாக மாறிவிடும். இதனை கருத்தில் கொண்டு தான் மாஸ்க்டு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. இந்த மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் விவரங்கள் பத்திரமாக இருக்கும்.

மாஸ்க்டு ஆதார் கார்டு பயன்கள்

  • மாஸ்க்டு ஆதார் கார்டு பயன்படுத்துவதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும்.
  • குறிப்பாக மாஸ்க்டு ஆதார் கார்டில் சாதாரன ஆதார் கார்டில் இருப்பது போல 12 எண்களும் இருக்காது. அதற்கு மாறாக கடைசி நான்கு எண்கள் மட்டுமே இருக்கும். அதற்கு முன்பு இருக்கும் 8 எண்கள் மறைக்கப்பட்டிருக்கும்.
  • அதன்படி, மாஸ்க்டு ஆதார் கார்டில் முதல் 8 எண்களுக்கு பதிலாக x என 8 முறை குறிப்பிடப்பட்டிருக்கும். இது உங்கள் ஆதார் எண்ணை பாதுகாக்க உதவுகிறது.
  • இந்த மாஸ்க்டு ஆதார் கார்டில் எண்கள் மட்டுமே மறைகப்பட்டிருக்கும். மற்றபடி உங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் அப்படியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நீங்களும் உங்கள் விவரங்கள் திருடப்படாமல் இருக்க வெண்டும் என நினைத்தால் இந்த மாஸ்டு ஆதார் கார்டை பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் தனியார் துறை வங்கிகள்!

மாஸ்க்டு ஆதார் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி

  1. ஆதார் குறித்த எந்த தேவை அல்லது சேவை என்றாலும் நீங்கள் UIDAI -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. இணையதளத்திற்கு சென்ற உடன் My Aadhaar என்ற விருப்பத்தின் கீழ் இருக்கும் Download Aadhaar என்பதை கிளிக் செய்யுங்கள்.
  3. நீங்கள் Download Aadhaar என்பதை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஆதார் கார்டை டவுன்லோட் செய்யும் பக்கம் காட்டும்.
  4. அதில் உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு ஐடியை வைத்து லாக் இன் செய்துக்கொள்ளுங்கள்.
  5. கேப்ட்சா உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு லாக் இன் செய்த உடன் Send OTP பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  6. அப்போது உங்களிடம் Do you want a masked Aadhaar Card என கேட்கப்படும்.
  7. அதனை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்துள்ள ஓடியை பதிவு செய்ய வேண்டும்.
  8. இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் சுலபமாக மாஸ்க்டு ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Farmer ID Card : ஆதார் கார்டை போலவே விவசாயிகளுக்கு அடையாள அட்டை.. வெளியான முக்கிய தகவல்!

நீங்கள் சாதாரன ஆதார் கார்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்கள் விவரங்களை பாதுகாக்க மாஸ்க்டு ஆதார் சிறந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!