444 நாள்கள் டெபாசிட், 8.10% வட்டி.. SBI உள்பட எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
Fixed deposit: இந்தியாவிலேயே அதிக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் உள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இந்தியர்கள் அதிகளவு முதலீடு செய்ய ஸ்திரத்தன்மை மற்றும் உறுதியான வருமானம் காரணம்.
எஸ்.பி.ஐ vs சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா: ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள், இந்திய முதலீட்டாளர்கள் இடையே மிகவும் விரும்பப்படும் இடத்தை பிடித்துள்ளன. இந்தியாவிலேயே அதிக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை ஈர்த்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடும் உள்ளது. இந்த அளவுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள காரணம், ஸ்திரத்தன்மை மற்றும் உறுதியான வட்டி ஆகும். இதனால், இளம் வயதினர் முதல் மூத்தக் குடிமக்கள் வரை இந்தத் திட்டங்களில் தைரியமாக முதலீடு செய்கின்றனர்.
இதையும் படிங்க : உலகின் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள் யார்? முழு விவரம்
எனினும் ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீமில் முதலீடு செய்வதற்கு முன்னர் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பீட்டு பார்ப்பது அவசியம் ஆகும். பொதுவாக எஃப்.டி வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றன.
இந்த எஃப்.டி வட்டி விகிதங்களை நிர்ணயிப்பதில் டெபாசிட்டின் காலம் மற்றும் தொகையின் அளவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், தற்போது நாம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 444 நாள்கள் சிறப்பு எஃப்.டி திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா VS சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இரண்டும் 444 நாள்கள் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கியுள்ளன.
இதில் எஸ்.பி.ஐ 444 நாள்கள் சிறப்பு எஃப்.டி அம்ரித் விருஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா எஃப்.டி, சென்ட் சூப்பர் டைம் டெபாசிட் என அழைக்கப்படுகிறது.
இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பொது மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு பல்வேறு டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களில் மாதம் ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ அம்ரித் விருஷ்டி திட்டத்தில் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதுவே மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும்.
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் 444 நாள்கள் எஃப்.டிக்கு பொதுகுடிமக்களுக்கு 7.45 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 7.95 சதவீதமும் வட்டி வழங்கப்படும். இதுவே திரும்ப அழைக்க முடியாத டெபாசிட்களுக்கு மூத்தக் குடிமக்களுக்கு 8.10 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
ரூ.2.50 லட்சம் முதலீடு
இதில் எஸ்.பி.ஐ திட்டத்தில் ரூ.2.50 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வின் போது, ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 833 வழங்கப்படும். இதுவே மூத்தக் குடிமக்கள் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 467 வழங்கப்படும்.
இதுவே சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.2.50 லட்சம் முதலீடுக்கு ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 976 வழங்கப்படும். இதுவே மூத்தக் குடிமக்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 615 வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 444-நாள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டமான அம்ரித் விருஷ்டி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவை சிறந்த எஃப்.டி திட்டங்களாக கருதப்படுகிறது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் இரண்டு திட்டங்களும் குறுகிய கால அளவுகளை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : PF பணம் ATM-மில் எப்போது வரும்? யார் யாருக்கு கிடைக்கும்?