SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!
Investment Scheme | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான முக்கிய வங்கிகளில் FD எனபப்டும் நிலையான வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி அதிக வட்டி வழங்குகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டியை வழங்குகிறது. குறிப்பாக 444 நாட்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் சிறப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் என்ன, அதில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.15 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : MSSC : 7.5% வட்டி.. பெண்களுக்கான சிறந்த சிறு சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!
எஸ்.பி.ஐ வங்கியின் நிலையான வைப்புநிதி திட்டம்
சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அந்த வகையில் எஸ்.பி.ஐ வங்கி பொதுவான நிலையான வைப்புநிதி திட்டங்கள் மட்டுமன்றி, 444 நாட்கள் கொண்ட அம்ரித் விருஷ்டி, அம்ரித் கலாஷ், சர்வோத்தம் போன்ற சிறப்பு நிலையான வைப்புநிதி திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : Indian Billionaire : $1.1 ட்ரில்லியனை தாண்டிய இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. மாஸ் காட்டும் தொழிலதிபர்கள்!
எஸ்.பி.ஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி FD வட்டி விகிதம்
எஸ்.பி.ஐ வங்கி செயல்படுத்தி வரும் அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்குகிறது. அதன்படி,
- 1 ஆண்டுக்கான அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.30% வட்டி வழங்குகிறது.
- 3 ஆண்டுகளுக்கான அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்குகிறது.
- 5 ஆண்டுகளுக்கான அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.50% வட்டி வழங்குகிறது.
- 444ம் நாட்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கான அம்ரித் விருஷ்டி திட்டத்திற்கு 7.75% வட்டி வழங்குகிறது.
எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி அதிக வட்டி வழங்க கூடிய ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும். குறுகிய கால முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மொத்தமாக முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என பார்க்கலாம்.
இதையும் படிங்க : Aadhaar Renewal : இன்னும் 2 மாதங்கள் மட்டும்தான் அவகாசம்.. அதுக்குள்ள ஆதார் கார்டுல இத பண்ணலனா சிக்கல்!
அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்கள் FD :
எஸ்.பி.ஐ-ன் இந்த 444 சிறப்பு திட்டத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்தால், திட்டத்தின் முதிர்வின்போது ரூ.78,296.34 வட்டியாக கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகை ரூ.8 லட்சம் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் ரூ.8,78,296.34 கிடைக்கும்.
இதேபோல எஸ்.பி.ஐ-ன் இந்த 444 சிறப்பு திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், திட்டத்தின் முதிர்வின்போது ரூ.1,46,805 வட்டியாக கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்த தொகை ரூ.15 லட்சம் மற்றும் வட்டி சேர்த்து மொத்தம் ரூ.16,46,80563 கிடைக்கும்.
இதையும் படிங்க : Forbes 2024 : ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியல் 2024.. முதல் இடத்தில் முகேஷ் அம்பானி.. 2வது இடத்தில் இருப்பது யார்?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.