5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. ரூ.2.50, ரூ.5, ரூ.7.50 மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

SBI Scheme | கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி பல்வேறு கால அளவீடுகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூன்று சிறப்பு திட்டங்களை செயபடுத்தி வருகிறது. அவை 1111 நாட்களுக்கான FD, 1777 நாட்களுக்கான FD மற்றும் 2222 நாட்களுக்கான FD-க்கள் ஆகும்.

Fixed Deposit : எஸ்பிஐ-ன் Green Rupee Term Deposit.. ரூ.2.50, ரூ.5, ரூ.7.50 மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 06 Oct 2024 18:33 PM

எஸ்பிஐ வங்கி பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் கிரீன் ருப்பி டெர்ம் டெபாசிட் திட்டம். கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், பசுமை திட்டங்களை ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தில் சிறந்த வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் இந்த கிரீன் ருப்பி டெர்ம் டெபாசிட் திட்டத்தில் ரூ.2.50 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.7.50 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : PPF Rules Changed : பிபிஎஃப் விதிகளில் அதிரடி மாற்றம்.. இன்று முதல் அமலுக்கு வருகிறது.. என்ன என்ன மாற்றங்கள் தெரியுமா?

எஸ்பிஐ வழங்கும் கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டங்கள்

கிரீன் ருப்பீ டெர்ம் டெபாசிட் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கி பல்வேறு கால அளவீடுகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூன்று சிறப்பு திட்டங்களை செயபடுத்தி வருகிறது. அவை 1111 நாட்களுக்கான FD, 1777 நாட்களுக்கான FD மற்றும் 2222 நாட்களுக்கான FD-க்கள் ஆகும்.

இதையும் படிங்க : Share Market : ஒரே வாரத்தில் 4,000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. சுமார் ரூ.16 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?

மேற்குறிப்பிட்ட இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களில் ரூ.2.50 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.7.50 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

1111 நாட்களுக்கான திட்டம்

1111 நாட்களுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டி வழங்குகிறது. அதன்படி,

  • 1111 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.2.50 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.3,10,186 கிடைக்கும்.
  • 1111 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.6,20,372 கிடைக்கும்.
  • 1111 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.7.50 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.9,30,558 கிடைக்கும்.
  • 1111 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.12,40,745 கிடைக்கும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 2 முதல் 5 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

1777 நாட்களுக்கான திட்டம்

1777 நாட்களுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.15% வட்டி வழங்குகிறது. அதன்படி,

  • 1777 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.2.50 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.3,53,000 கிடைக்கும்.
  • 1777 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.7,06,011 கிடைக்கும்.
  • 1777 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.7.50 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.10,59,016 கிடைக்கும்.
  • 1777 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.14,12,022 கிடைக்கும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!

2222 நாட்களுக்கான திட்டம்

2222 நாட்களுக்கான திட்டத்திற்கு எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 6.65% வட்டி வழங்குகிறது. அதன்படி,

  • 2222 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.2.50 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.3,05,580 கிடைக்கும்.
  • 2222 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.6,11,160 கிடைக்கும்.
  • 2222 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.7.50 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.9,16,740 கிடைக்கும்.
  • 2222 நாட்களுக்கான திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் திட்டத்தில் முடிவில் ரூ.12,22,320 கிடைக்கும்.

இதையும் படிங்க : Indian Rupees : இந்திய ரூபாய் நோட்டிற்கு காந்தியின் புகைப்படம் முதல் தேர்வு அல்ல.. முதல் தேர்வு என்ன தெரியுமா?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News