Post Office Scheme : அஞ்சலக சேமிப்பு திட்டம்.. மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?
Recurring Deposit | அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவை மிகவும் பாதுகாப்பனவையாக உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அஞ்சல சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
பொருளாதாரம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நிலையான பொருளாதாரம் இல்லையென்றால், நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனை கருத்தில் கொண்டு தான் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், பாதுகாப்பான பொருளாதாரத்தை அமைத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்வதன் மூலம் 5 ஆடுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வழங்கிகள்!
அஞ்சலக சேமிப்பு திட்டம்
அனைவரது வாழ்விலும் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். மாறிக்கொண்டே இருக்கும் பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடுமையாக நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இந்த நிலையில்தான் பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக சேமிப்பு திட்டம்.
இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?
இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவை மிகவும் பாதுகாப்பனவையாக உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அஞ்சல சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
5 ஆண்டு கால தொடர் வைப்புத் தொகை திட்டம்
அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமானது 5 ஆண்டு கால தொடர் வைப்புத் தொகை திட்டம். இந்த அஞ்சலக தொடர் வைப்புத் தொகை திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு சுமார் 6.7 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் திட்டத்தின் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும் என்பதற்காக கணக்கீட்டை பின்வருமாறு பார்க்கலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
5 ஆண்டு கால முதலீடு
நீங்கள் அரசின் இந்த அஞ்சலக தொடர் வைப்புத் தொகை திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தின் மொத்த கால அளவீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகை மொத்தம் ரூ.1,20,000 ஆக இருக்கும். இந்த திட்டத்தின் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு முதிர்வின் போது ரூ.1,42,732 கிடைக்கும். அதன்படி, இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 5 ஆண்டுகளுக்கான வட்டி மட்டும் ரூ.22,732 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.