5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

Post Office | அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக பிரத்யேக திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டத்தின் சான்றிதழ் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 25 Oct 2024 15:57 PM

பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நிலையான பொருளாதாரத்தை அடையும் நோக்கில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதால் அஞ்சலக சேமிப்பு திட்டம். இது அரசால் நடத்தப்படும் சேமிப்பு திட்டம் என்பதால் இது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக சேமிப்பு திட்டம். இது அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள திட்டம் ஆகும். இதனால் இந்த திட்டம் பாதுகாப்பாக இருப்பது மட்டுமன்றி, இந்த திட்டத்திற்கு அதிக வட்டியும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் பெண்களுக்காக பிரத்யேக திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம். இந்த சேமிப்பு திட்டத்தின் சான்றிதழ் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு 7.5% வரை வட்டி வழங்கப்படும் நிலையில், ரூ.1,000 முதல் ரூ.2 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?

இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டமான இந்த  மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும், முதிர்வின் போது வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் முதலீடு

2 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட இந்த மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்த தொகைக்கான வட்டியாக ரூ.16,022 கிடைக்கும். அதனுடன் சேர்த்து அசல் தொகையும் திருப்பி செலுத்தப்படும். அதன்படி, திட்டத்தின் முடிவில் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ.1,16,022 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

ரூ.50,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்

2 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் ரூ.50,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 2 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்த தொகைக்கான வட்டியாக ரூ.8,011 கிடைக்கும். அதனுடன் சேர்த்து அசல் தொகையும் திருப்பி செலுத்தப்படும். அதன்படி, திட்டத்தின் முடிவில் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ.58,011 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News