5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!

Interest Rate | ஒவ்வொரு தனி மனிதருக்கும் சேமிப்பு என்பது கட்டாயம் ஆகும். சேமிப்பு இல்லை என்றால் நிதி பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே பொதுமக்கள் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சேமிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியம் ஆகும்.

Fixed Deposit : அஞ்சலக FD.. ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 25 Oct 2024 11:11 AM

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பும் நபர்கள் அரசாங்கத்தின் நம்பக தன்மையுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், அஞ்சலக நிலையான சேமிப்பு திட்டத்தில் ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம். அதுமட்டுமன்றி, நிலையான வைப்புநிதி திட்டம் என்றால் என்ன, அதில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Insurance Scheme : 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு அதிரடி!

அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டம் என்றால் என்ன?

ஒவ்வொரு தனி மனிதருக்கும் சேமிப்பு என்பது கட்டாயம் ஆகும். சேமிப்பு இல்லை என்றால் நிதி பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே பொதுமக்கள் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து சேமிக்க தொடங்கிவிட்டனர். சேமிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது முக்கியம் ஆகும். இதற்காக தான் அரசாங்கம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முதன்மையானது தான் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். அஞ்சலகங்கள் மூலம் அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் பாதுகாப்பானதாக இருப்பது மட்டுமன்றி சிறந்த வருமானம் பெற உதவுவதால் பெரும்பாலான மக்கள் இதில் முதலீடு செய்கின்றனர். இந்நிலையில் அத்தகைய அஞ்சலக சேமிப்பு திட்டம் ஒன்று குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிஙக் : ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்

அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இந்த நிலையில் இந்த ஆண்டுகளில் ரூ.25,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி

1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், ஒரு ஆண்டில் உங்களுக்கு ரூ.1,775 வட்டியாக கிடைக்கும். அதன்படி உங்களுக்கு மொத்தம் ரூ.26,775 கிடைக்கும்.

2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி

2 ஆண்டுக்காளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், 2 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.3,722 வட்டியாக கிடைக்கும். அதன்படி உங்களுக்கு மொத்தம் ரூ.28,722 கிடைக்கும்.

இதையும் படிங்க : New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி

3 ஆண்டுக்காளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.5,877 வட்டியாக கிடைக்கும். அதன்படி உங்களுக்கு மொத்தம் ரூ.30,877 கிடைக்கும்.

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி

5 ஆண்டுக்காளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் ரூ.25,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.11,249 வட்டியாக கிடைக்கும். அதன்படி உங்களுக்கு மொத்தம் ரூ.36,249 கிடைக்கும்.

இதையும் படிஙக் : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

மேற்குறிப்பிட்ட அளவீடுகளின் படி நீங்கள் நிலையான வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அதுமட்டுமன்றி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீட்டு தொகையை நிர்ண்யித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News