5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SBI FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான FD.. 5 ஆண்டுகளுக்கு ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

Interest Rate | எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்தில் 5 ஆண்டுக்களுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SBI FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான FD.. 5 ஆண்டுகளுக்கு ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 17 Nov 2024 12:50 PM

மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வு காலத்தில் நிதி சிக்கல்களை சந்திக்கும் அபாயம் உள்ளது. அதனை தடுக்கும் வகையில் தான் அரசு மற்றும் தனியார் சார்பில் பல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களின் ஒன்றுதான், மூத்த குடிமக்களுக்கான FD, அதாவது நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள், தங்களது கடைசி காலத்தை பாதுகாப்பாக கழிக்க முடியும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்தில் 5 ஆண்டுக்களுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு ஏன் அவசியம்?

மனிதர்களின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதற்கு சேமிப்பு ஒரு மிக முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறை அல்லது நிதி நெருக்கடியில் சிக்கி சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஒவ்வொருவரும் தங்களின் நிதி தேவைகளுக்காக கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலத்தை பெற முடியும். இதற்கு உதவும் விதமாக தனியார் மற்றும் அரசு சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்

பொதுமக்கள் சேமிப்பதற்காக செயல்படுத்தப்படும் அரசு மற்றும் தனியார் சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD என்று கூறப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையான வைப்புநிதி திட்டம் மூத்த குடிமக்களுக்கு சிறந்த முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என பார்க்கலாம்.

ரூ.5 லட்சம் முதலீடு

எஸ்பிஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த முதலீட்டிற்கு ரூ.2,24,974 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5,00,000 சேர்த்து மொத்தமாக ரூ.7,24,974 கிடைக்கும்.

ரூ.10 லட்சம் முதலீடு

எஸ்பிஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த முதலீட்டிற்கு ரூ.4,49,948 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.10,00,000 சேர்த்து மொத்தமாக ரூ.14,49,948 கிடைக்கும்.

இதையும் படிங்க : Inflation : தங்காளி முதல் தங்கம் வரை.. பணவீக்கத்திற்கு காரணமான 5 பொருட்கள்.. நிதித்துறை செயலர் கூறுவது என்ன?

ரூ.15 லட்சம் முதலீடு

எஸ்பிஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த முதலீட்டிற்கு ரூ.6,74,922 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.15,00,000 சேர்த்து மொத்தமாக ரூ.21,74,922 கிடைக்கும்.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News