DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
Government Employee | மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து இரண்டாவதாக ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக 50% அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3% உயர்த்தப்பட்டு 53% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதால் சம்பளமும் உயரும் நிலையில் யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!
ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்படும் அகவிலைப்படி உயர்வு
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு முதல் முறை ஜனவரி மாதத்திலும், பிறகு 6 மாதங்கள் கழித்து இரண்டாவதாக ஜூலை மாதத்திலும் அகவிலைப்படி உயர்த்தப்படும். அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது நடைமுறைப்படுத்தப்படும். பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை போலவே பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு 2 முறை டிஆர் உயர்த்தப்படும்.
இதையும் படிங்க : Gold Price October 19, 2024: உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி
இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், அடுத்த அகவிலைப்படி எப்போது அறிவிக்கப்படும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 16 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க : Fixed Deposit : ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதுமட்டுமன்றி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போலவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதை போலவே தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 50% ஆக அகவிலைப்படியை 3% உயர்த்தி 53% ஆக அறிவித்தார்.
இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!
அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு எவ்வளவு கிடைக்கும்?
ஒரு ஊழியர் ரூ.30,000 மாத சம்பளம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரது அடிப்படை ஊதியம் ரூ.18,000 என்ற நிலையில், அவர் தற்போது ரூ.9,000 அகவிலைப்படியாக பெறுவார். இது அடிப்படை ஊதியத்தின் 50% ஆகும். தற்போது அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ரூ.30,000 ஊதியம் வாங்கும் ஊழியருக்கு மாதம் ரூ.9,540 அகவிலைப்படியாக கிடைக்கும். அதாவது முன்பு வாங்கிய ஊதியத்தை விட அந்த ஊழியருக்கு மாதம் மாதம் ரூ.540 அதிகமாக கிடைக்கும். இதேபோல் ஒரு ஆண்டுக்கு ரூ.6,480 வரை கூடுதலாக கிடைக்கும். இதேபோல ஒரு ஊழியர் ரூ.50,000 மாத சம்பளம் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மாதத்திற்கு கூடுதலாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே ஆண்டுக்கு ரூ.18,000 கூடுதலாக கிடைக்கும்.
இதையும் படிங்க : Meesho : ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மீஷோ.. 9 நாட்கள் விடுமுறை அளித்து அசத்தல்.. ஏன் தெரியுமா?
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமன்றி 3 மாத நிலுவைத் தொகை மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவை சேர்ந்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.