5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மாதம் ரூ.2 ஆயிரம் முதலீடு.. ரூ.3 கோடி சாத்தியம்: எப்படி?

Power of mutual fund SIP: மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி மூலமாக ரூ.2 ஆயிரம் சேமிப்பில் ரூ.3 கோடி என்ற இலக்கை எட்ட முடியும். அதற்கு நாம் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்? மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன?

மாதம் ரூ.2 ஆயிரம் முதலீடு.. ரூ.3 கோடி சாத்தியம்: எப்படி?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 16 Nov 2024 15:21 PM

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி என்பது ஆரம்ப காலகட்டத்தில் ஓர் சிறிய தொகையுடன் முதலீட்டை தொடங்கி, பெரிய அளவிலான கார்ப்ஸை உருவாக்க வல்லது. இதனை பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். எனினும், அதிலுள்ள சந்தை அபாயங்களை அவர்கள் சுட்டிக் காட்ட தயங்குவதில்லை. பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகள் ஈக்விட்டி, லார்ஜ், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் என பலவகைகளில் வருகின்றன. இதில், அதிக ரிஸ்க், உயர் ரிட்டன் என்பன போன்ற பங்குகளும் உள்ளன. இந்தப் பங்குகளில் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். தற்காலத்தில் பண்ட் நிர்வாகிகள் இருந்தாலும், அதிக ரிஸ்க் பண்ட்களில் முதலீடு செய்யும்போது, மிகுந்த கவனம் அவசியம்.

எஃப்.டி, மியூச்சுவல் ஃபண்ட் வேறுபாடு

மேலும், நாம் தேர்ந்தெடுத்த முதலீடு கூட்டு வட்டியை வழங்குவதா? முதலீடுகளுக்கு நிலையான வட்டி விகிதம் கிடைக்குமா? அல்லது சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளா? என்பதை அறிந்துக்கொள்வதும் அவசியமாகிறது.
பொதுவாக முதலீடுகளில், ஃபிக்ஸட் டெபாசிட் ஓர் முறையிலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றொரு முறையிலும் செயல்படுகின்றன. இதில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் காலம் மற்றும் வங்கிகளுக்கு ஏற்ப ஓர் நிலையான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும்.

இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்.. கனரா வங்கி vs எஸ்.பி.ஐ: எதில் பெஸ்ட் ரிட்டன்?

மியூச்சுவல் ஃபண்ட்கள் எப்படி செயல்படுகின்றன?

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இவ்வாறு எதுவும் கிடையாது. கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம் சந்தையை பொறுத்தது. அதாவது சந்தை லாபகரமாக செயல்பட்டால், முதலீட்டாளருக்கு அதற்கேற்ப வருவாய் கிடைக்கும்.
அதேநேரம், சந்தையில் எதிர்பாராத விதமாக தொய்வு ஏற்பட்டால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் சொத்து நிர்வாகிகள் இருந்தாலும் லாபம், நஷ்டத்தை பொறுத்தவரை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தவிர்க்க முடியாதது ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஃபண்டும் ஒவ்வொரு விதியை வகுத்துள்ளன. இதில், நிறுவனத்தின் ரிஸ்க்-ஐ பொறுத்து முதலீடுகள் மாறுகின்றன. பரஸ்பர நிதிகளை பொறுத்தவரை ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளை விட லார்ஜ்கேப் ஃபண்டுகள் ரிஸ்க் குறைந்தவைகளாக மதிப்பிடப்படுகின்றன.

முதலீடு கோடிகளில் வளர்வது எப்போது?

இந்த நிலையில் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் ரூ.2 ஆயிரம் வீதம் முதலீடு செய்தால், கோடிகளை எட்ட எத்தனை ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
உதாரணத்துக்கு நாம் முதலீடு செய்யப் போகும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் 12-13 சதவீதம் வரை ரிட்டன் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். நாம் 30 ஆண்டுகள் வரை முதலீடு செய்தால் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு செய்திருப்போம். இதில், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.81,21,294 ஆகவும், மதிப்பிடப்பட்ட மொத்த மதிப்பு ரூ.88,41,294 ஆகவும் இருக்கும்..

40 ஆண்டுகள் முதலீடு

இதுவே 40 ஆண்டுகள் முதலீடு என்றால் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.9,60,000 ஆக காணப்படும். தொடர்ந்து, மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.3,17,48,677 ஆகவும், மதிப்பிடப்பட்ட மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 27 லட்சத்து 8 ஆயிரத்து 677 ஆகவும் காணப்படும்.
இதுவே 20 ஆண்டுகள் என்றால் தலீடு செய்யப்பட்ட தொகை ரூ.4 லட்சத்து 80 ஆயிரமாகவும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 38 ஆகவும், மதிப்பிடப்பட்ட மொத்த மதிப்பு ரூ.22 லட்சத்து 91 ஆயிரத்து 38 ஆகவும் வளர்ந்திருக்கும்.

தொடர்ந்து, 10 ஆண்டுகள் முதலீடு என்றால் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாகவும், மதிப்பிடப்பட்ட மூலதன லாபம் ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 361 ஆகவும், மதிப்பிடப்பட்ட மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 93 ஆயிரத்து 361 ஆகவும் இருக்கும்.

இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?

எளிதான முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி.-யை பொறுத்தவரை எளிதான முதலீடாக உள்ளது. ஆகவே, ரூ.2 ஆயிரத்தில் முதலீடு தொடங்குவது என்பது கடினம் கிடையாது. இதுவே வருவாய் உயரும் போது தங்களின் சேமிப்பையும் அதிகரித்துக் கொள்ளலாம். எனினும், ரூ.2 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு என்பது குறுகிய காலத்தில் மிகப்பெரிய மாயாஜாலத்தை காட்டது. இதில் நீண்ட கால காத்திருப்பு மற்றும் தொடர்ச்சியான முதலீடு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.

Latest News