முதலீட்டாளர்களுக்கு அறிய வாய்ப்பு.. ரூ.100க்கு என்.டி.பி.சி ஐ.பி.ஓ: விண்ணப்பிப்பது எப்படி?
NTPC Green Energy Ltd IPO : என்.டி.பி.சி கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ சந்தாக்கள் இந்த வாரம் முதலீட்டுக்கு திறக்கப்படுகின்றன. முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி மதிபபிலான ஐ.பி.ஓ.க்கள் பங்கு வெளியீட்டுக்கு திறக்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு அறிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி (NTPC)யின் துணை நிறுவனமான என்.டி.பி.சி கிரீன் எனர்ஜி, ஐ.பி.ஓ (NTPC Green Energy Ltd IPO) வெவளியிடுகிறது. இதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பங்குகளை பெற்றுக் கொள்ளலாம். அதன்படி, முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான முதல் பங்கு வெளியீடு, நவம்பர் 19 முதல் 22 வரை பொதுச் சந்தாவிற்கு திறக்கப்படும். இதில், சில்லறை வணிகம், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. இதற்கிடையில், என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன் தாய் நிறுவனமான என்டிபிசிக்கும் ஆரம்ப பொதுச் சலுகையில் 10 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.
ஆரம்ப பொதுச் சலுகை (ஐ.பி.ஓ) என்றால் என்ன?
பங்கு ஆரம்ப பொது வெளியீடு (ஐபிஓ) என்பது ஒரு தனியார் நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பங்குச் சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது ஆகும். இது, பங்கு முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளிக்கிறது.
இதற்கிடையில், என்டிபிசி க்ரீன் எனர்ஜி ஐபிஓ ஜிஎம்பி அதிகாரப்பூர்வமற்ற சந்தையில் ரூ. 2.5 – 3க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது, இன்வெஸ்டோர்கெய்ன் மற்றும் ஐபிஓ வாட்ச் படி, இது சுமார் 3 சதவீதம் பிரீமியத்தைக் குறிக்கிறது.
என்.டி.பி.சி கிரீன் எனர்ஜி, ஐ.பி.ஓ விலை
இந்தப் பங்கின் ஐ.பி.ஓ விலை ரூ.102-ரூ.108 வைர நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முதலீட்டாளர் குறைந்தப்பட்சம் 138 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் 138 மடங்குகளில் ஐபிஓவில் விண்ணப்பிக்க வேண்டும்.
உதாரணமாக, ஓர் பங்கின் விலை ரூ.102 என வைத்துக்கொண்டால் முதலீட்டாளர்கள் ரூ.3 ஆயிரத்து 876க்கு விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து, 138ன் மடங்குகளில் ஐ.பி.ஓ-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் படிங்க: மாதம் ரூ.2 ஆயிரம் முதலீடு.. ரூ.3 கோடி சாத்தியம்: எப்படி?
ரூ.1 லட்சம் கோடி முதலீடு இலக்கு
இதற்கிடையில், ஐபிஓ-பிரிவுட் என்டிபிசி க்ரீன் எனர்ஜி, FY27க்குள் சூரிய மற்றும் காற்றாலை சொத்துக்களில் ரூ. 1 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, என்டிபிசி க்ரீன் எனர்ஜியில் ஆரம்பம் முதல் ரூ.7,500 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், ரூ.1 லட்சம் கோடி முதலீட்டை கோருகிறது.
92.59 கோடி பங்குகள்
என்.டி.பி.சி க்ரீன் எனர்ஜி ஐ.பி.ஓ நவ. 19ஆம் தேதி தொடங்கி நவ. 22ஆம் தேதி நிறைவடைகிறது. நிறுவனம் 92.59 கோடி புதிய பங்குகளை விற்று ரூ.10,000 கோடி திரட்டவுள்ளது. இதற்கான ஒதுக்கீடு நவம்பர் 25ம் தேதி இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து, தேசிய பங்குச் சந்தை (NSE)மற்றும் மும்பை பங்குச் சந்தையில் (BSE) நவம்பர் 27ஆம் தேதியன்று பட்டியலிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓர் ஈக்விட்டி பங்கின் விலை ரூ.102 முதல் ரூ.108 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்கிற்கு, ஐடிபிஐ கேபிடல் மார்க்கெட் சர்வீசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் மற்றும் நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட் ஆகியவை முன்னணி மேலாளர்களாக உள்ளனர்.
மற்ற முன்னணி ஐ.பி.ஓ.க்கள்
இதேபோல் ஸிங்கா லாஜிஸ்டிக் மற்றும் லாமோசைக் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களும் ஐ.பி.ஓ.க்கள் வெளியிட உள்ளன. இதில், ஸிங்கா லாஜிஸ்டிக் ஐ.பி.ஓ மூலமாக ரூ.1,114.72 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
இந்தப் பங்குகள் விற்பனை நவ.13ஆம் தேதி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தப் பங்குகளின் ஒதுக்கீடு நவ.19ஆம் தேதி இறுதி செய்யப்பட உள்ளது. என்.எஸ்.சி மற்றும் பி.எஸ்.சி பங்குச் சந்தைகளில் நவ.21ஆம் தேதி பட்டியலிடப்பட வாய்ப்புகள் உள்ளன. இதன் ஈக்விட்டி பங்கு ரூ.259 முதல் ரூ.273 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இதில் வெளீயிட்டு விலையில்ர ரூ.25 தள்ளுபடியில் ஊழியர்களுக்கு 26 ஆயிரம் பங்குகள் முன்பதிவு செய்யப்பட்டன.
நவ.21 தொடக்கம்- விலை
இதற்கிடையில், லாமோசைக் இந்தியா நிறுவனம் பங்கு வெளியீடு மூலமாக ரூ.61.20 கோடி திரட்ட விரும்புகிறது. இது ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.200 என்ற நிலையான விலை நிர்ணயித்துள்ளது.
இதன், ஐபிஓ நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடையும். பங்குகளின் ஒதுக்கீடு நவம்பர் 27 ஆம் தேதி இறுதி செய்யப்படும். 30.6 லட்சம் புதிய பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?
விண்ணப்பிப்பது எப்படி?
எந்தவொரு முதலீட்டாளரும், டிமேட் அல்லது வங்கிக் கணக்கு மூலம் ஐ.பி.ஓ பங்குகளை வாங்கலாம். இதில், சில வங்கிகள் வர்த்தகம், டீமேட் மற்றும் வங்கிக் கணக்கை ஒரே தொகுப்பின் கீழ் வழங்குகின்றன.
அதன்படி, உங்கள் டிரேடிங் மற்றும் டிமேட் கணக்கை நீங்கள் செயல்படுத்தியவுடன், ஐபிஓக்களில் எளிதாக முதலீடு செய்யலாம் ன்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: பங்குச் சந்தை முதலீடுகள் அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் கூறப்பட்டுள்ள முதலீட்டு உதவிக்குறிப்புகள் இணையதளம் அல்லது அதன் நிர்வாகத்தின் கருத்துகள் அல்ல. எந்தவொரு முதலீடு முடிவையும் எடுக்கும் முன், முதலீட்டு நிபுணர்களை தொடர்புக் கொள்வது நல்லது.