ரயில் டிக்கெட்டில் பெயர் தப்பாகிடுச்சா? கவலைய விடுங்க.. இப்படி மாற்றுங்க!

Train Ticket Name Change: ரயில் டிக்கெட் முன்பதிவின் போது பயணியின் பெயரை தவறுதலாக அளித்துவிட்டால், அதனை திருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. இது எப்படி? யார் யார் திருத்த முடியும்? இதற்கு என்ன தேவை?

ரயில் டிக்கெட்டில் பெயர் தப்பாகிடுச்சா? கவலைய விடுங்க.. இப்படி மாற்றுங்க!

ரயில் டிக்கெட் முன்பதிவு பெயர் திருத்தம்

Updated On: 

28 Nov 2024 12:58 PM

ரயில் டிக்கெட் பெயர் திருத்தம்: அவசர சூழலில் அத்தியாவசியமான பயணத்தின்போது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்கவோ, ஏஜென்ட் கமிஷனுக்கு பணம் செலவழிக்கவோ தேவையில்லை. ஐ.ஆர்.சி.டி.சி போன்ற இணையதளங்கள் மற்றும் செயலி வழியாக உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்நேரங்களில் அவசரம் அல்லது கவனக்குறைவு காரணமாக சில நேரங்களில், பயணியின் பெயரை தவறாக குறிப்பிடலாம். மேலும், வேறு ஏதேனும் பிழை செய்யலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ரயில்வே டிக்கெட்டில் பெயரை எவ்வாறு மாற்றுவது என்று குறித்து அறிந்துக் கொள்ளலாம்.

ரயில்வே கொள்கை என்ன?

ரயில்வே டிக்கெட்டில் பெயரை மாற்றுவதற்கு முன்பு, இத்தகைய மாற்றங்கள் தொடர்பாக இந்திய ரயில்வே வகுத்துள்ள கொள்கைகளை நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டின் வகை, நீங்கள் தேர்ந்தெடுத்த முன்பதிவு முறை மற்றும் திருத்த கோரிக்கையின் நேரம் போன்ற பல காரணிகள் இதில் பிரதானமாக உள்ளன.
மேலும், பெயர் மாற்றங்கள் இந்திய ரயில்வேயின் ஒப்புதலுக்கு உட்பட்டவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : வந்தே பாரத் vs ராஜ்தானி.. டிக்கெட் விலை, சொகுசான பயணம்.. எந்த ரயில் பெஸ்ட்?

ரயில் டிக்கெட்டில் பெயரை எப்படி மாற்றுவது?

ரயில் டிக்கெட்டில் பெயரை மாற்ற இரண்டு முறைகள் உளளன. இதில் முதலாவது ஆஃப்லைன், இரண்டாவது ஆன்லைன் ஆகும்.
இதில் ஆஃப்லைன் முறையில் நீங்கள் உங்களின் பெயரை திருத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் கவுண்ட்டரை அணுக வேண்டும். இதற்கு சரியான ஐ.டி. ஆவணம் அவசியம்.

ஐ.ஆர்.சி.டி.சி இணையம் அல்லது செயலி

ஐ.ஆர்.சி.டி.சி இணையம் அல்லது செயலி வாயிலான பெயர் உள்ளிட்ட விவரங்களை திருத்த உங்கள் ஐ.ஆர்.சி.டி.சி கணக்கில் தேவையான சான்றிதழ்களுடன் உள்நுழைய வேண்டும்.
அதில். ‘போர்டிங் பாயின்ட் மற்றும் பயணிகளின் பெயர் கோரிக்கையை மாற்று’ படிவ இணைப்பிற்குச் சென்று தேவையான மாற்றங்களைச் செய்ய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பெயர் மாற்றத்திற்கு யார் தகுதியானவர்? ரயில்வே விதிகள் கூறுவது என்ன?

ஐ.ஆர்.சி.டி.சி விதிகளின்படி, ரயில் டிக்கெட்டுகளில் பெயர்களை மாற்ற அனுமதி இல்லை. இருப்பினும், சில விதிவிலக்குகள் உள்ளன. அந்த வகையில், பின்வரும் நபர்கள் பெயர்களை திருத்த தகுதியானவர்கள் ஆவார்கள்.

குடும்ப உறுப்பினர்கள்

பெயர் மாற்றக் கோரிக்கை குடும்ப உறுப்பினருக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இருந்தால், இந்தக் கோரிக்கையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அப்போது எவ்வித ரத்து அல்லது முன்பதிவு கட்டணமும் இல்லாமல் மாற்றத்தைக் கோரலாம். இதற்கு நிலைய மேலாளரின் அனுமதி கட்டாயம் தேவை.

அரசு ஊழியர்கள்

சம்பந்தப்பட்ட பயணி, பணியில் இருக்கும் அரசு ஊழியராக இருந்தால் திட்டமிட்டபடி புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் சில சலுகைகள் வழங்கப்படும். இதற்கு, உரிய அதிகாரி எழுத்துப்பூர்வமாக மாற்றக் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.

குழு பயணம்

இதேபோல், ஒன்றாகப் பயணம் செய்தால், அவர்கள் ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். எனினும், இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த பெயர் திருத்த சலுகையை ஐ.ஆர்.சி.டி.சி இணைய செயலி மட்டுமின்றி வேறு சில தனியார் செயலிகளும் வழங்குகின்றன. அதில், நீங்கள் பயணம் குறித்து முன்பதிவு டிக்கெட் பெற்றிருந்தால் இது குறித்து விண்ணப்பிக்கலாம்.
எனினும் இதுவும் விதிகளுக்கு உட்பட்டது. சம்பந்தப்பட்ட செயலிகள் இந்த சலுகையை கொண்டுள்ளதா? என்பதை அறிந்துக் கொள்வது அவசியம்.

மாற்று வழி என்ன?

நீங்கள் 18604251188, 9986286688 மற்றும் 18604253322 என்ற ஹெல்ப்லைன் எண்களை அழைத்து உங்கள் பெயர் மாற்றக் கோரிக்கையைச் செயல்படுத்த உதவியை கோரலாம்.
இதில், சில மாற்றங்கள் செயல்படுத்தப்பட்ட உடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வங்கி வரிசையில் வா.. அடிச்சி நகர்த்தும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள்.. இவ்ளோ வட்டியா?

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?