Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்! - Tamil News | How to choose the right credit card : check these 5 points while choosing | TV9 Tamil

Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!

Published: 

03 Sep 2024 12:01 PM

Credit Card | பொதுமக்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்தும் வகையில் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இந்த கிரெடி கார்டுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு லிமிட் ஒதுக்கப்படும். பயனர்கள் அந்த லிமிட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவழித்த பிறகு அதனை மாத தவனையாகவோ அல்லது மொத்தமாக திருப்பி செலுத்தும் அம்சமும் உள்ளது.

Credit Card : உங்களுக்கான சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?.. இந்த 5 விஷயம் தான் முக்கியம்!

கோப்பு புகைப்படம் (Photo credit: Matt Cardy/Getty Images)

Follow Us On

கிரெடிட் கார்டு : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சேவைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்பெல்லாம் கடன் வாங்க வேண்டும் என்றால் வங்கிகள் அல்லது உறவினர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும். அதுவும் வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்றால் அதற்கான காரணம், உரிய ஆவணங்கள் என பல்வேறு படி நிலைகளை தாண்டி தான் கடன் கிடைக்கும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. பொதுமக்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்தும் வகையில் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இந்த கிரெடிட் கார்டுகளில் ஒவ்வொருவருக்கும் ஒரு லிமிட் ஒதுக்கப்படும். பயனர்கள் அந்த லிமிட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை செலவழித்த பிறகு அதனை மாத தவனையாகவோ அல்லது மொத்தமாக திருப்பி செலுத்தும் அம்சமும் உள்ளது. இந்த கிரெடி கார்டு மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலர் இந்த கிரெடி கார்டுகளை பயன்படுத்த முடியாமல் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி விடுகின்றனர். இந்த நிலையில் உங்களுக்கு ஏற்ற சரியான கிரெடி கார்டை தேர்வு செய்வது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : New UPI Circle Rules : இனி ஒரே வங்கி கணக்குக்கு இரண்டு யுபிஐ.. NPCI-ன் UPI சர்க்கிள் விதிகள் கூறுவது என்ன?

சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?

செலவுக்கு ஏற்ற கிரெடிட் கார்டு

உங்களுது தேவைகளுக்கு ஏற்ப கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும். குறிப்பான நீங்கள் அதிகம் பயணம் செய்கிறீர்கள், உணவகங்களுக்கு செல்கிறீர்கள் என்றால் அதற்காக கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு கேஷ் பேக் மற்றும் ரிவார்டு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

வாழ்க்கை முறைக்கு ஏற்ற கிரெடி கார்டு

சிலருக்கு கேஷ் பேக்குகள் சிறந்ததாக தோன்றலாம், சிலருக்கு ரிவார்டு பாயிண்ட்ஸ்கள் சிறந்ததாக தோன்றலாம். எனவே உங்களுக்கு எது தேவையோ அதற்கு ஏற்ற கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்யுங்கள்.

வருடாந்திர கட்டணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணங்கள் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி கிரெடிட் கார்டுகளை வாங்கும்போது ஜாயிண்ட் கட்டணமும் செலுத்த வேண்டும். எனவே, வருடாந்திர கட்டணம், வட்டி விகிதங்கள் ஆகிய விவரங்கள் மீது  கூடுதல் கவனம் தேவை.

இதையும் படிங்க : Aadhaar Card : ஆதார் கார்டில் முகவரியை மாற்ற இந்த 45 ஆவணங்களை பயன்படுத்தலாம்.. எவையெல்லாம் தெரியுமா?

சிறப்பு சலுகைகள்

கிரெடிட் கார்டு வாங்கும்போது அந்த கார்டு ஷாப்பிங் மற்றும் பயணத்திற்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். எனவே தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கும் கார்டுகளை தேர்ந்தெடுங்கள்.

வெல்கம் போனஸ்

கிரெடிட் கார்டுகள் ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக் அல்லது வவுச்சர்கள் வடிவில் வெல்கம் போனஸ்களை வழங்குகின்றன. எனவே கிரெடிட் கார்டுகளை தேந்தெடுக்கும்போது போனஸை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version