5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒத்த பைசா வரி இல்ல.. மாதம் ரூ.91 ஆயிரம் வருமானம்: போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்!

PPF Monthly interest calculator: பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்தால் மாதம் ரூ.91,418 வரியில்லா வருமானம் கிடைக்கும் என்பது பல்வேறு முதலீட்டாளர்களுக்கு தெரிவதில்லை. அந்த வகையில் நாம் தற்போது, பி.பி.எஃப் முதலீடு குறித்து பார்க்கலாம்.

ஒத்த பைசா வரி இல்ல.. மாதம் ரூ.91 ஆயிரம் வருமானம்: போஸ்ட் ஆபீஸில் அசத்தல் திட்டம்!
பி.பி.எஃப் முதலீடு
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Updated On: 02 Dec 2024 14:19 PM

பி.பி.எஃப் மாத ஓய்வூதியம்: இந்திய குடிமகனான எந்தவொரு தனிநபரும், இந்திய அஞ்சலகங்களில் பி.பி.எஃப் ஸ்கீமை தொடங்கலாம். இந்த முதலீடுக்கு போஸ்ட் ஆபீஸ் அதிகப்பட்சமாக 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வட்டி விகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிதி அமைச்சகம் மதிப்பாய்வு செய்கிறது. மேலும், இந்தத் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச பங்களிப்பு ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். திட்டத்தின் முதிர்ச்சி (லாக்-இன்) காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

ஸ்கீம் நீட்டிக்கும் வாய்ப்பு

பி.பி.எஃப் திட்டத்தில் முதிர்ச்சி காலம் முடிந்ததும், ஒருவர் 100 சதவீத ஓய்வூதியத் தொகையை திரும்பப் பெறலாம். மேலும், முதலீட்டாளரின் விருப்பப்படி திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என நீடிக்கும் வசதியும் இதில் உள்ளது.
இதில் உச்சப்பட்ச லாபம் என்னவென்றால், இந்த நீட்டிப்புகளின் போது, ​​அவர்கள் எந்த முதலீடும் செய்யாமல் தங்கள் கணக்கை தொடரலாம். லாக்-இன் காலத்திற்குப் பிறகு அவர்கள் எந்த முதலீட்டையும் செய்யாவிட்டாலும், அவர்கள் முதலீடு செய்த தொகைக்கு வட்டியைப் பெறுவார்கள்.

பி.பி.எஃப் விதி விலக்கு

சந்தாதாரர் தங்கள் பிபிஎஃப் கணக்கை மேற்கொண்டு முதலீடு செய்யாமல் தொடர்ந்தால், அவர்கள் ஒரு நிதியாண்டில் ஒருமுறை பிபிஎஃப் தொகையை திரும்பப் பெறலாம்.
தற்போது நாம் பி.பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர் தனது இ.பி.எஃப் பங்களிப்பின் வட்டியில் இருந்து ஒரு மாதத்திற்கு ரூ.90 ஆயிரம் வரை வட்டி இல்லாத வருமானம் பெறலாம். அது எப்படி என்பது தெரியுமா? அது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: கனரா வங்கி FD வட்டி தாறுமாறு உயர்வு.. புதிய வீதம் தெரியுமா?

ரூ.90 ஆயிரம் வட்டி இல்லாத வருமானம் பெறுவது எப்படி?

பொதுவாக பி.பி.எஃப் திட்டத்தில் பங்களிப்புகளின் அதிகபட்ச பலன்களைப் பெற, ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் 5 வரை முதலீடு செய்ய வேண்டும்.

இதன் மூலம் முழு நிதியாண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். வட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குதாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
பி.பி.எஃப் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு முன் நிதியாண்டில் ரூ.1,50,000 ஒருவர் முதலீடு செய்யத் தொடங்கினால், 15 ஆண்டுகளில், முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.22,50,000 ஆக இருக்கும்.

இந்தத் தொகைக்கு வட்டி ரூ. 18,18,209 ஆக இருக்கும். அதே நேரத்தில் முதிர்வு மதிப்பு ரூ. 40,68,209 ஆக காணப்படும். அடுத்து திட்டத்தை நீட்டிக்க வேண்டும்.

5 ஆண்டுகள் நீட்டிப்பு

அதன்படி, அவர்கள் 5 ஆண்டு நீட்டிப்பு எடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 5-க்கு முன் ரூ. 1,50,000 முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ. 30,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.36,58,288 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.66,58,288 ஆகவும் காணப்படும்.
இதனை மேலும் 5 ஆண்டுகள், அதாவது மொத்தம் 25 ஆண்டு முதலீடாக தொடர்ந்தால், அதாவது ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,50,000 முதலீடு செய்தால், 25 ஆண்டுகளில், முதலீடு ரூ.37,50,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ.65,58,015 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ. 1 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 015 ஆக காணப்படும்.

தொடர்ந்து, மேலும் ஒரு 5 ஆண்டுகள் நீட்டித்து, ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1,50,000 முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் அவர்களின் முதலீடு ரூ. 45,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட வட்டி ரூ. 1,09,50,911 ஆகவும், மதிப்பிடப்பட்ட முதிர்வுத் தொகை ரூ.1,54,50,911 ஆகவும் காணப்படும்.
அப்போது, ரூபாய் 1,54,50,911 ஓய்வூதியம் பெறுவதற்கான வருடாந்திர மதிப்பிடப்பட்ட வட்டி ரூ. 10,97,014.681 ஆக இருக்கும். அந்த வகையில், மாத வட்டியாக ரூ.91,418 அளிக்கப்படும்.

இதையும் படிங்க : நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு, ரூ.1 கோடி ஈஸி ரிட்டன்!

Latest News