மாதம் ரூ.500-ஐ ஒதுக்குங்க.. ரூ.1,60,728-ஐ தூக்குங்க: PPF திட்டத்தில் வருமானம் பார்ப்பது எப்படி?

PPF Calculator: பி.பி.எஃப் திட்டத்தில் மாதம் ரூ.500 வீதம் சேமித்தால், 15 ஆண்டுகால முதிர்வின் போது எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்? பி.பி.எஃப் திட்டத்தின் வட்டி என்ன? பார்க்கலாம்.

மாதம் ரூ.500-ஐ ஒதுக்குங்க.. ரூ.1,60,728-ஐ தூக்குங்க: PPF திட்டத்தில் வருமானம் பார்ப்பது எப்படி?

பி.பி.எஃப் முதலீடு

Updated On: 

28 Nov 2024 17:37 PM

பொது வருங்கால வைப்பு நிதி என்பது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் நடத்தப்படும் பிரபலமான ஸ்திரமான வட்டி திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டம் வரியில்லா வருமானத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் சம்பாதித்த வட்டிக்கு வரி இல்லை. முதலீட்டாளர்கள் பி.பி.எஃப் முதலீட்டை தங்கள் போர்ட்ஃபோலியோவின் பல்வகைப்படுத்தலுக்குப் பயன்படுத்தலாம். இதற்கிடையில், உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரிட்டர்ன் திட்டமானது கூட்டு வட்டியை வழங்குகிறது. இது நீண்ட காலத்திற்குள் நல்ல கார்ப்ஸை வழங்க உதவுகிறது. மேலும், 15 வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகு ஒருவர் கார்பஸை திரும்பப் பெறலாம்.

மேலும், முதலீட்டாளர் தங்களின் பி.பி.எஃப் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் முடியும். தற்போது நாம் பி.பி.எஃப் கணக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது? இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.500 வீதம் முதலீடு செய்தால் லாக்இன் காலமான 15 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : வங்கி வரிசையில் வா.. அடிச்சி நகர்த்தும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள்.. இவ்ளோ வட்டியா?

பி.பி.எஃப் திட்டத்தின் வகைகள்

முதலில் பி.பி.எஃப் திட்டத்தில் 2 வகைகள் உள்ளன. அதில் ஒன்று, லம்ப்சம் முதலீடு ஆகும். மற்றொன்று பி.பி.எஃப் திட்டத்தில் உள்ளது போன்ற மாதாந்திர சேமிப்பு ஆகும்.
இதில் மாதாந்திர சேமிப்பை விட லம்ப்சம் முதலீடுக்கு வட்டி அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவர் ரூ.500 செலுத்தி பி.பி.எஃப் கணக்கை தொடங்கலாம்.
ரூ.1,50,000 வரை வரி விலக்கு அளிக்கப்படும். செல்வ மகள் சேமிப்பு திட்டம் இது இருப்பதால், இதனை செல்வ மகன் சேமிப்பு திட்டம் என முதலீட்டாளர்கள் கூறுவார்கள்.

திட்டத்தை நீட்டிப்பது எப்படி?

பி.பி.எஃப் திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 4 விதமான விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.

  • கணக்கு மூடும் படிவத்தை பாஸ் புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பித்து முதிர்வுத் தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
  • சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட நீட்டிப்புப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் கணக்கை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.
  • டெபாசிட் இல்லாமல் தங்கள் கணக்கில் முதிர்வு மதிப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கும் பி.பி.எஃப் வட்டி விகிதங்கள் பொருந்தும்.
  • டெபாசிட்களுடன் நீட்டிக்கப்பட்ட கணக்கில், ஒவ்வொரு நிதியாண்டிலும் 1 முறை திரும்ப பெறலாம்.

திட்டத்தை முன்கூட்டியே மூடலாமா?

கணக்கு வைத்திருப்பவர், மனைவி அல்லது சார்ந்திருக்கும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான நோய் ஏற்பட்டால் மூட அனுமதிக்கப்படும். மேலும், சார்ந்திருக்கும் குழந்தைகளின் உயர்கல்வி அல்லது குடியுரிமை நிலை மாற்றம் போன்ற காரணிகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.

ரூ.1.60 லட்சம் குவிப்பது எப்படி?

இந்தத் திட்டத்தில் தற்போதைய 7.1 சதவீத வட்டி திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6,000 (மாதம் ரூ.500) முதலீடு செய்யப்பட்டால் 15 ஆண்டுகால முடிவில் 90 ஆயிரம் முதலீடு செய்து இருப்பீர்கள்.
இதில் வட்டியாக ரூ.72 ஆயிரத்து 728 வழங்கப்படும். ஆக, 15 ஆண்டுகால முதிர்வின் போது, ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 728 வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் முன்னரே கூறியது போல், 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதியும் உள்ளது. அப்படி பாரக்கும் போது வருவாய் இன்னும் அதிகமாக உயரும். ஆனால், இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : 6 மாதத்தில் லட்சாதிபதி.. இந்த டாப் 5 ஃபண்டுகளை பாருங்க!

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?