Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

வீட்டுக் கடன் என்பது ஒருவர் தன் வாழ்நாளில் வாங்கும் மிகப்பெரிய கடன் மற்றும் நீண்ட கடன் ஆகும். இந்த கடனை முழுமையாக கட்டி முடித்தால் தான் அடமானத்தில் இருக்கும் வீட்டு பத்திரம் வீட்டின் உரிமையாளரின் கைக்கு வரும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு மாதமும் வீட்டுக் கடனுக்கான EMI தொகையை கட்ட வேண்டும்.

Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

வீட்டுக் கடன்

Updated On: 

19 Aug 2024 13:12 PM

வீட்டுக் கடன்: இந்திய மக்களை பொறுத்தவரை ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பது அவர்களின் மிகப்பெரிய வாழ்க்கை இலக்குகளில் ஒன்றாக கருதுகின்றனர். இதனால், ஒரு சொந்தமாக வீடு வாங்குவதற்கு வங்கி, நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குகின்றனர். மற்ற கடன்களை போல வீட்டுக் கடனை சாதாரமானது கிடையாது.  வீட்டுக் கடன் என்பது ஒருவர் தன் வாழ்நாளில் வாங்கும் மிகப்பெரிய கடன் மற்றும் நீண்ட கடன் ஆகும். இந்த கடனை முழுமையாக கட்டி முடித்தால் தான் அடமானத்தில் இருக்கும் வீட்டு பத்திரம் வீட்டின் உரிமையாளரின் கைக்கு வரும். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு மாதமும் வீட்டுக் கடனுக்கான EMI தொகையை கட்ட வேண்டும். இல்லையென்ல் பெனால்டி என்ற ஒரு தொகைகயை அந்த நிறுவனம் உங்களிடம் இருந்து வசூலிக்கும். இதனால் பல நேரங்களில் தேவையில்லாமல் நிதி சிக்கலை ஏற்படுத்தும். இதுபோன்ற சிக்கலை தவிர்க்க வீட்டுக் கடனை விரைவாக அடைப்பதற்கான வழிகளை பார்ப்போம்.

Also Read: குறைந்ததா தங்கம் விலை? இன்றைய நிலவரம் இதுதான்.. செக் பண்ணிக்கோங்க!

வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்க டிப்ஸ்:

வீட்டுக் கடன் வாங்கும்போது நீண்ட கால வீட்டுக் கடனை தேர்வு செய்ய வேண்டாம். நீண்ட கால வீட்டுக் கடனை தேர்வு செய்யும்போது வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை சீராக இருந்தால் குறுகிய கால வீட்டுக் கடனை தேர்ந்தெடுப்பது நல்லது. இது குறைந்த வட்டி விகிதங்களுடன் திருப்பிச் செலுத்தும் முறை எளிமைப்படுத்தும். மேலும், உங்களுக்கு பல இடங்களில் நிதிச்சுமை இருந்து அதனுடன் வீட்டுக் கடனையும் தொடர்கிறீர்கள் என்றால், குறைந்த வட்டிக்கு கடனை மறுநிதியளிப்பதற்காக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

உங்கள் வட்டி விகிதத்தை குறைக்க வங்கியிடம் கோரிக்கை வைக்கலாம். நீங்கள் வீட்டுக்கடனை எடுக்கும்போகும் முன், வெவ்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது முக்கியம். இது உங்கள் நிலுவைத் தொகையை மற்ற வங்கிக்கு மலிவான வட்டி விகிதத்தில் மாற்ற உதவலாம். நீங்கள் ஒரு வீட்டை வாக்கும்போது மொத்த விலையில் குறைந்தபட்சம் 20 சதவிதத்தை முன்பணமாக செலுத்தினால் உங்களுக்கு மாதம் EMI கட்டுவதில் சிரமங்கள் குறையும்.

எனவே, நீங்கள் வீட்டுக் கடன் வாங்கும்போது முடிந்தவரை முன்பணம் செலுத்த முயற்சிக்கவும். இது கடன் தொகையைக் குறைப்பதோடு, குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறவும் உதவும். உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையை குறைக்க விரும்பினால், கடன் தொகையை முன்கூட்டியே செலுத்துவதை கருத்தில் கொள்ள வேண்டும். முன்கூட்டியே செலுத்துதல் அசல் தொகையை குறைத்து, செலுத்தும் வட்டி தொகையையையும் குறைக்கிறது.

Also Read: ரூ.7 செலுத்தினால் போதும்.. மாதம் ரூ.5,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்!

இதை செய்வதற்கு முன், உங்களுக்கு கடன் வழங்கும் வங்கி அல்லது நிறுவனம், கடன் தொகையை முன்கூட்டியே செலுத்துவதற்கு எந்த ஒரு அபராதம், கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை சம்பந்தப்பட்ட வங்கியில் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?