Ration Card : ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி.. முழு விவரம் இதோ!
Mobile Number | சில முக்கியமான சேவைகளை பயன்படுத்தும்போது, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்காவிட்டால் OTP வராது. இவ்வாறு நடப்பதன் மூலம் அரசாங்க திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை ஏற்படலாம்.
இந்திய குடும்பங்களின் மிக முக்கிய ஆவணமாக உள்ளது ரேஷன் அட்டை. ரேஷன் அட்டையில், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்கள கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான், ரேஷன் மற்றும் ரேஷன் அட்டை குறித்து முக்கிய தகவல்கள் எந்தவித தடையுமின்றி கிடைக்கும். இந்த நிலையில், ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை சேர்ப்பது மற்றும் புதிய மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : “ஆபிஸ் வரலைன்னா வேலையை விட்டு போயிடுங்க” ஊழியர்களுக்கு வார்னிங் கொடுத்த அமேசான்!
மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் ரேஷன் அட்டை
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ரேஷன் கார்டில் புதிய மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் 7 வாங்கிகள்.. பட்டியல் இதோ!
ரேஷன் அட்டை பயன்பாட்டு விதிகள் முற்றிலுமாக மாறியுள்ளது. முன்பெல்லாம் ரேஷன் அட்டையில் ஊழியர்கள் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே டிஜிட்டல் சேவைகளை கொண்ட ரேஷன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் மொபைல் எண் கட்டாயம் என்ற நிலை உள்ளது. எனவே ரேஷன் அட்டையில் புதிய மொபைல் எண்ணை சேர்ப்பது எப்படி என விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் அட்டையில் மொபைல் எண் ஏன் அவசியம்
சில முக்கியமான சேவைகளை பயன்படுத்தும்போது, ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்காவிட்டால் OTP வராது. இவ்வாறு நடப்பதன் மூலம் அரசாங்க திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை ஏற்படலாம். எனவே, உங்கள் ரேஷன் அட்டையில் தவறான அல்லது நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை புதுப்பித்துவிட்டால் அதை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி
- ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய முதலில் ரேஷன் அட்டைக்கான பிரத்யேக இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் “சிட்டிசன் கார்னர்” என்ற பிரிவை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் மொபைல் எண் அல்லது மாற்றம் என்று இருக்கும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இதன் பிறகு தோன்றும் புதிய பக்கத்தில் குடும்பத் தலைவர் அல்லது தலைவியின் NFS ஐடியை உள்ளிட வேண்டும்.
- பிறகு ரேஷன் அட்டை எண்ணை பதிவிட வேண்டும்.
- அதனுடன் சேர்த்து குடும்ப தலைவர் அல்லது தலைவியின் பெயரை பதிவிட வேண்டும்.
- பிறகு மாற்ற அல்லது அப்டேட் செய்ய விரும்பும் மொபைல் எண்ணை உள்ளிட்டு பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாக ரேஷன் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் அல்லது புதுப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.