5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அதிரடி காட்டிய செபி.. பின்வாங்கிய சி2சி IPO.. பணத்தை திரும்ப பெறுவது எப்படி?

C2C Advanced Systems IPO Application: செபியின் அறிவிப்பை தொடர்ந்து, நிறுவனம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு, பங்கு ஒதுக்கீட்டிற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளது.

அதிரடி காட்டிய செபி.. பின்வாங்கிய சி2சி IPO.. பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
சி2சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஐபிஓ
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 27 Nov 2024 11:19 AM

சி2சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஐ.பி.ஓ திரும்ப பெறுதல்: சி2சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட், இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் உத்தரவைத் தொடர்ந்து, நவம்பர் 29 ஆம் தேதி ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த அதன் ஈக்விட்டி பங்கு பட்டியலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக, நிறுவனத்தின் நிதிக் கணக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சுயாதீன அறிக்கையை சமர்ப்பிக்கவும் தணிக்கையாளர்களை நியமிப்பதை ஒழுங்குமுறை அமைப்பு கட்டாயப்படுத்தியது. இது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐ.பி.ஓ.வில் உள்ள சிக்கல் என்ன? முதலீட்டாளர்கள் பணத்தை திரும்ப பெறுவது எப்படி?

ஐ.பி.ஓ வெளியீட்டில் சிக்கல்

செபியின் அறிவிப்பை தொடர்ந்து, நிறுவனம் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு, பங்கு ஒதுக்கீட்டிற்கு முன் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளது.
இந்தத் திரும்ப பெறும் விருப்பம் நவம்பர் 28, மதியம் 3:00 மணி வரை அமலில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் புதிய சந்தாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இதற்கிடையில், சி.2.சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஒரு சுயாதீன தணிக்கையாளரின் நியமனத்தை உறுதிப்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, இது தொடர்பான அறிக்கை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இதைத் தொடர்ந்து, செபி மற்றும் தேசிய பங்குச் சந்தை சில நடவடிக்கைகளை எடுக்கும். இந்தப் பட்டியல் வெளியாகும் வரை நியமனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

இதையும் படிங்க : பான் கார்டு திருத்தம், புதுப்பிப்பு இலவசம்.. இந்தப் புதிய திட்டம் தெரியுமா?

திரும்ப பெறும் விதிகள் என்ன?

இதற்கிடையில், சி.2.சி அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஐபிஓவுக்கான விண்ணப்பங்களை திரும்பப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • முதலீட்டாளர்கள் தாங்கள் விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்த வங்கி அல்லது தரகு நிறுவனத்தை அணுக வேண்டும்.
  • விண்ணப்பத்தை அல்லது ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை அளிக்க வேண்டும்.
  • நியமிக்கப்பட்ட இடைத்தரகர் கோரிக்கையின் அடிப்படையில் என்.எஸ்.இ.யில் பங்கு ஏலத்தை ரத்து செய்வார்.
  • ஏலத்தை ரத்து செய்ததை உறுதிப்படுத்தும் வகையில், பரிவர்த்தனை பதிவு சீட்டு வழங்கப்படும். இதனை இடைத் தரகரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளவும்.

கடைசி தேதி

இந்த ஐ.பி.ஓ விண்ணப்பத்தில் நவம்பர் 28, பிற்பகல் 3:00 மணிக்குப் பிறகு எந்த மாற்றமும் செய்ய முடியாது. இதனால், முதலீட்டாளர்கள் திரும்பப்பெறும் செயல்முறையை காலக்கெடுவுக்கு முன்பாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா பங்குகள்

வோடபோன் ஐடியா லிமிடெட் பங்குகள் நேற்றைய (நவ.26, 2024) வர்த்தகத்தில் 18.63 சதவீதம் உயர்ந்து ரூ.8.28 ஆக உயர்ந்தது. பங்கு இறுதியில் 7.88 சதவீதம் உயர்ந்து ரூ.7.53 ஆக இருந்தது.
முன்னதாக, சுமார் 18.72 கோடி பங்குகள் கை மாறியதால் மும்பை பங்குச் சந்தையில் (பி.எஸ்.இ) அதிக வர்த்தக அளவைக் கண்டன.
இந்த எண்ணிக்கை இரண்டு வார சராசரி அளவு 4.97 கோடி பங்குகளை விட அதிகமாக இருந்தது. இதற்கிடையில், கவுண்டரில் விற்றுமுதல் ரூ.147.92 கோடியாக காணப்பட்டது. சந்தை மூலதனம் (எம்-கேப்) ரூ.52,483.96 கோடியாக இருந்தது.

வோடபோன் 5ஜி சேவை

இதற்கு மத்தியில் வோடபோன் தனது ஃபாலோ-ஆன் ஆஃபரில் ரூ.18,000 கோடியை திரட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 5ஜி சேவைகளை வழங்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளது.

மேலும், வோடபோன் செப்டம்பர் 2024 காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒரு குறுகிய நிகர இழப்பை பதிவு செய்தது. மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் இழப்பு ரூ.7,175.9 கோடியாக உள்ளது.
அதேநேரத்தில், நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் செயல்பாடுகளின் வருவாய் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.10,716.3 கோடியிலிருந்து 2.02 சதவீதம் அதிகரித்து ரூ.10,932.2 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :  Explained: SIP என்றால் என்ன? யார் யார் முதலீடு செய்யலாம்?

Latest News