அம்பானியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை.. யார் அந்த தொழிலதிபர்.. டாப் 10 லிஸ்ட்!

EdelGive Hurun India Philanthropy List 2024: 203 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை EdelGive-Hurun வெளியிட்டுள்ளது. முதன்முறையாக 96 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் 203 பேர் மொத்தம் ரூ.8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 55% அதிகம். இந்தியாவின் முதல் 10 நன்கொடையாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்

அம்பானியை விட 5 மடங்கு அதிகமாக நன்கொடை.. யார் அந்த தொழிலதிபர்.. டாப் 10 லிஸ்ட்!

தொழிலதிபர்கள் (Image : Canva)

Published: 

08 Nov 2024 10:48 AM

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தலைசிறந்த நன்கொடையாளர்களின் பட்டியல் வெளிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் 203 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை EdelGive-Hurun வெளியிட்டுள்ளது. முதன்முறையாக 96 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் 203 பேர் மொத்தம் ரூ.8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 55% அதிகம். இந்தியாவின் முதல் 10 நன்கொடையாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்

பட்டியலின் சிறப்பம்சங்கள்

HCL டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு அதிகபட்ச நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த பட்டத்தை ஷிவ் நாடார் மூன்றாவது முறையாக பெறுகிறார். அவரது நன்கொடைகளின் சராசரியைக் கணக்கிட்டால், அவர் தினமும் ரூ.5.9 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதிக நன்கொடை வழங்கிய பெண் என்றால்ரூ.154 கோடி நன்கொடை அளித்த 65 வயதான ரோகினி நிலேகனிக்கு செல்கிறது.

Also Read : வோடபோன் ஐடியா பங்குகள் நிலைமை என்ன? வாங்கலாமா? விற்கலாமா? இதோ விவரம்!

Hurun இன் ஆய்வின்படி, இந்தியாவில் இப்போது 18 பேர் ஆண்டுதோறும் ₹100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர் (2019 இல் இருந்து 10 பேர் அதிகம்), 30 பேர் ₹50 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர் (2019 இல் இருந்து 125% அதிகமாக) மற்றும் 61 பேர் ₹ 20 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார் (2019ஐ விட 128% அதிகம்). நன்கொடை வழங்கிய இளையவர் ஜீரோதாவைச் சேர்ந்த நிகில் காமத் ஆவார்.

முதல் 10 நன்கொடையாளர்கள் யார்?

ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் ₹2,153 கோடி நன்கொடை அளித்துள்ளனர். கல்வி மற்றும் கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பணியாற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலம் அவர் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் ₹407 கோடி நன்கொடை அளித்துள்ளனர். அவரது நன்கொடைகளில் பெரும்பாலானவை கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம், கல்வி, விளையாட்டு மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் கலாச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

பஜாஜ் குடும்பம் ₹352 கோடி நன்கொடை அளித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 33% அதிகம். அவர்களின் கவனம் கிராமப்புற சமூகங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் உள்ளது.

Also Read : மூடப்படும் ஏடிஎம்கள்.. பட்ஜெட் போடும் வங்கிகள்.. UPI ஏற்படுத்தும் மாற்றங்கள்.. முழு விவரம்!

குமார் மங்கலம் பிர்லா மற்றும் குடும்பத்தினர் ₹334 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இது கல்வி, சுகாதாரம், பெண்கள் அதிகாரம் மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் நன்கொடை அளிக்கிறது.

கவுதம் அதானி மற்றும் குடும்பத்தினர் ₹330 கோடி நன்கொடை அளித்துள்ளனர். அதானி அறக்கட்டளை மூலம் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக இந்த நன்கொடை வழங்கப்படுகிறது.

நந்தன் நிலேகனி ₹307 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் தனது மனைவி ரோகினி நிலேகனியுடன் இணைந்து சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர முயற்சி எடுத்துள்ளார்.

கிருஷ்ணா ஷிவுகுலா ஐஐடி மெட்ராஸுக்கு ₹228 கோடி நன்கொடை அளித்துள்ளார், இது பல ஆராய்ச்சி திட்டங்களுக்கு துணைபுரியும்.

அனில் அகர்வால் மற்றும் குடும்பத்தினர் ₹181 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர், இது பல சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது.

சுஸ்மிதா மற்றும் சுப்ரோடோ பாக்சி ஆகியோர் ₹179 கோடி நன்கொடை அளித்து அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் பாக்சி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவினர்.

கல்வி மற்றும் சமூக சேவை துறையில் பணியாற்றும் ரோகினி நிலேகனி , ₹154 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!