Ration Card : 5.8 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து.. டிசம்பர் 31-க்குள் இத பண்ணுங்க.. இல்லனா உங்க அட்டையும் ரத்து செய்யப்படலாம்!
KYC Update | இந்தியாவில் செயல்பாட்டில் இருந்து சுமார் 5.8 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திட அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டிஜிட்டல் கேஒய்சி செய்யப்படாத ரேஷன் அட்டைகளும் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் வறுமை, பசி மற்றும் பட்டினி உள்ளிட்டவை மிக முக்கியமான மற்றும் தீவிர பிரச்னையாக கருதப்படுகிறது. இந்த நிலையில், பட்டினியில்லா நாட்டை கட்டமைக்கும் வகையில் இந்தியா முழுவதும் ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகளை ஆதார் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது KYC (Know Your Customer) நடைமுறைப்படி ரேஷன் அட்டை விவரங்களை ஆதார் அட்டையுடன் இணைத்து விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவரங்கள் சரிபார்க்கப்படுவதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு அவை முற்றிலுமாக நீக்கம் செய்யப்படும் என மத்திய அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது சுமார் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் போலியானவை என கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : Ration Card : பண்டகமில்லா குடும்ப அட்டை.. ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் ரேஷன் அட்டை திட்டம்
இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் பசி, பட்டினி இல்லாமல் நலமாக வாழ பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது ரேஷன் அட்டை மூலம் பொது மக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதாவது கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையை விட 20 முதல் 30 ரூபாய் ரேஷன் கடைகளில் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொருட்களை வாங்க அந்த குடும்பம் வறுமை கோட்டின் கீழ் இருக்க வேண்டும். அவ்வாறு வறுமை கோட்டின் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு அரசு மேலும் பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office FD : ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு 3 மடங்கு லாபம் தரும் அசத்தல் திட்டம்!
5.8 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கிய மத்திய அரசு
இந்தியா முழுவதும் பொதுமக்களின் நலனுக்காக ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் அந்த திட்டத்தை தவறாக பயன்படுத்துவது, அந்த திட்டம் மூலம் முறைகேடுகள் செய்வது தொடர்கதையாக வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு ஒரு அதிரடி முயற்சி மேற்கொண்டது. அதுதான் கேஒய்சி சரிபார்ப்பு நடைமுறை ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டை விவரங்களை சேகரித்து அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய முடியும். இந்த நிலையில் அரசு வெளியிட்ட தகவலின் படி சுமார் 80.6 கோடி பயனாளிகளை கொண்ட பொது விநியோக திட்டத்தில் நடைமுறையில் சுமார் 20.4 குடும்ப அட்டைதாரர்கள் விநியோக நடைமுறையை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை கணினி மயமாக்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 99.8% மொத்த குடும்ப அட்டைகளில் தனிப்பட்ட பயனாளிகளில், சுமார் 98.7 சதவீதம் குடும்ப அட்டைகள் ஆதார் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. இந்த கேஒய்சி நடைமுறையின் மூலம் 80.6 கோடி குடும்ப அட்டைகளில் சுமார் 5.8 கோடி போலி அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SBI Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, 14, 21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
ரேஷன் அட்டை கேஒய்சி செய்வது எப்படி
- ரேஷன் அட்டை கேஒய்சி மேற்கொள்ள முதலில் https://tndps.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ரேஷன் அட்டை நிலை (Ration Card Status) என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களின் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
- அவ்வாறு குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்யும்போது உங்கள் ரேஷன் அட்டை செயல்பாட்டில் இருந்தால் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என காட்டும்.
- ஒருவேளை, ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை என்றால் செயலிழக்கப்பட்டது என காட்டும்.
- அதை கிளிக் செய்து ரேஷன் அட்டை எண்ணை பதிவிடும் பட்சத்தில் ரேஷன் அட்டை கேஒய்சி நிறைவு பெறும்.
ரேஷன் அட்டை டிஜிட்டல் கேஒய்சி செய்ய வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.