5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

SBI FD : எஸ்பிஐ-ன் நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

SBI Bank | இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான எஸ்பிஐ வங்கி 7 நாட்கள் முதல் சுமார் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த வட்டி வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

SBI FD : எஸ்பிஐ-ன் நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 20 Nov 2024 17:40 PM

பொதுமக்கள் சேமிக்க பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம். பல்வேறு வங்கிகள் வெவ்வேறு கால அளவீடுகளை கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், எஸ்பிஐ வங்கி வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office RD : ரூ.5,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.8 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்!

நிலையான வைப்பு நிதி திட்டம் என்றால் என்ன?

பொதுமக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் வங்கிகள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD என்று அழைக்கப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை வட்டியாக பெற முடியும். வங்கிகளில் மட்டுமன்றி, அரசு சார்பில் அஞ்சலங்களிலும் நிலையான வைப்பு நிதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மககளுக்கு முதலீடு செய்ய அதுவே முதல் தேர்வாக உள்ளது.

எஸ்பிஐ வங்கி வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான எஸ்பிஐ வங்கி 7 நாட்கள் முதல் சுமார் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு எஸ்பிஐ வங்கி சிறந்த வட்டி வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி வழங்கும் 30 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்ம்.

இதையும் படிங்க : Senior Citizen FD : மூத்த குடிமக்களுக்கான FD.. 8.75% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

நிலையான வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம்

எஸ்பிஐ வங்கி வழங்கும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல, 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வரை எஸ்பிஐ வட்டி வழங்குகிறது.

முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்

இப்போது எஸ்பிஐ வங்கியின் இந்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என பார்க்கலாம். எஸ்பிஐ வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ஒருவர் 30 மாதங்களுக்கு ரூ.3 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படும். இந்த நிலையில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.3 லட்சத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கான வட்டி மட்டும் ரூ.56,833 கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முடிவில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.3 லட்சம் மற்றும் வட்டி தொகை ரூ.56,833 என மொத்தமாக ரூ.3,56,833 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SSY Vs PPF : சுகன்யா சம்ரித்தி யோஜனா Vs பொது வருங்கால வைப்பு நிதி.. எது சிறந்த வட்டி வழங்குகிறது?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News