Post Office FD : அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
Fixed Deposit | அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம் முதலீடு செய்ய ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம் ஆகும். நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மட்டுமன்றி அரசு சார்பில் அஞ்சலங்களிலும் செயல்படுத்தபப்டுகின்றன. வங்கிகளில் செயல்படுத்தப்படும் நிலையான வைப்பு நிதி திட்டங்களை விடவும் அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது. காரணம், அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. அதுமட்டுன்றி, இந்த திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலையில் அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையான வைப்பு நிதி திட்டம் என்றால் என்ன?
நிலையான வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு வகையான முதலீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பயனர்கள், திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு முதலீடு செய்யும்போது அதை எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். பயனர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Post Office RD : அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட்.. ரூ.2,000 முதலீட்டுக்கு கொட்டும் லாபம்.. முழு விவரம் இதோ!
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்ட சிறப்பு அம்சங்கள்
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம் முதலீடு செய்ய ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் 3 முதல் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் முதலீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமககளுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, ரூ.14 மற்றும் ரூ.21 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம் முதலீடு
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.4,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்த தொகையை முதலீடு செய்கிறீர்கள் என்றால் ஆண்டுக்கு சுமார் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். அதன்படி, நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.1,79,979 வட்டியாக கிடைக்கும். அதாவது திட்டத்தின் முடிவின் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.4 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.1,79,979 இரண்டும் சேர்த்து மொத்தமாக ரூ.5,79,979 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வட்டியுடன் நல்ல வருமானத்தை பெற விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.