5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Senior Citizen FD : எஸ்பிஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான FD.. 1 ஆண்டு திட்டத்தில் ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Interest Rate | இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதியவர்கள், பாதுகாப்பான எதிர்காலத்தை பெற முடியும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்தில் 1 ஆண்டுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

Senior Citizen FD : எஸ்பிஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான FD.. 1 ஆண்டு திட்டத்தில் ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 16 Nov 2024 12:04 PM

மூத்த குடிமக்களுக்கு தங்களது கடைசி காலத்தில் நிதி சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை தடுக்கும் வகையில் தான் பலவேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களின் ஒன்றுதான், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதியவர்கள், பாதுகாப்பான எதிர்காலத்தை பெற முடியும். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கியின் அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்தில் 1 ஆண்டுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?

பொருளாதார நிலைத்தன்மையில் முக்கிய பங்கு வகிக்கும் சேமிப்பு

மனிதர்களின் பொருளாதார நிலைத்தன்மையில் சேமிப்பு ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். எனவே, ஒவ்வொருவரும் கட்டாயம் தங்களின் நிதி தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிதி பற்றாக்குறை அற்ற எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். இதன் காரணமாக தான் தனியார் மற்றும் அரசு சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்

சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD என்று அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தை பெற முடியும். குறிப்பாக இந்த மூத்த குடிமக்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் 1 ஆண்டுக்கு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office FD : அஞ்சலக FD திட்டம்.. ரூ.5,000, ரூ,10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மூத்த குடிமக்களுக்கான FD முதலீடு

ரூ.5 லட்சம் முதலீடு

எஸ்பிஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த முதலீட்டிற்கு ரூ.48,935 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5,00,000 சேர்த்து மொத்தமாக ரூ.5,48,935 கிடைக்கும்.

ரூ.10 லட்சம் முதலீடு

எஸ்பிஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த முதலீட்டிற்கு ரூ.97,870 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.10,00,000 சேர்த்து மொத்தமாக ரூ.10,97,870 கிடைக்கும்.

இதையும் படிங்க : Post Office FD : முதலீட்டை டபுளாக்கும் அசத்தல் அஞ்சலக திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

ரூ.15 லட்சம் முதலீடு

எஸ்பிஐ வங்கியின் இந்த அம்ரித் விருஷ்டி மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் செய்த முதலீட்டிற்கு ரூ.1,46,805 வட்டியாக கிடைக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.10,00,000 சேர்த்து மொத்தமாக ரூ.16,46,805 கிடைக்கும்.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News