Post Office FD : ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு 3 மடங்கு லாபம் தரும் அசத்தல் திட்டம்!
Interest Rate | அரசின் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் சிறந்த லாபம் தரும் திட்டமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.6 லட்சம் மற்றும் முதலீடு செய்து ரூ.18 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாதுகாப்பான எதிர்காலத்தை பெற அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான் அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்கள் வங்கிகளில் செயல்படுத்தப்படுவதும் மட்டுமன்றி, அரசு சார்பில் அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. அரசின் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் சிறந்த லாபம் தரும் திட்டமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் ரூ.6 லட்சம் மற்றும் முதலீடு செய்து ரூ.18 லட்சம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : SBI Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, 14, 21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தின் சிறப்புகள்
பொதுமக்கள் சேமிக்க செயல்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்களில் அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டம் சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம், அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவை மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கபப்டுவதால் ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூன்று மடங்கு லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
அஞ்சலக நிலையான வைப்பு நிதி மற்றும் அதன் லாபம்
அரசின் இந்த அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு ரூ.6 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கான அஞ்சல நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, நீங்கள் முதலீடு செய்த ரூ.6 லட்சத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.2,69,969 வட்டியாக கிடைக்கும். இதன் மூலம் திட்டத்தின் முதிர்வில் மொத்தமாக ரூ.8,69,969 கிடைக்கும். இந்த நிலையில், இந்த முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீங்கள் நீட்டிக்க வேண்டும். அவ்வாறு நீடிக்கும் பட்சத்தில் மொத்தம் 10 ஆண்டுகள் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6 லட்சத்திற்கு 10 ஆண்டுகளுக்கு வட்டியாக ரூ.6,61,410 கிடைக்கும். அதன்படி, திட்டத்தின் முடிவில் 10 ஆண்டுகள் கழித்து மொத்தமாக ரூ.12,61,410 கிடைக்கும்.
இதையும் படிங்க : Post Office FD : அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!
ரூ.18 லட்சம் பெற என்ன செய்ய வேண்டும்
அரசின் இந்த அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு ரூ.6 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் ரூ.12,61,420 கிடைக்கும். இந்த நிலையில் திட்டத்தை மேலும் ஒரு 5 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும். அவ்வாறு நீட்டிக்கும் பட்சத்தில் மொத்த 15 ஆண்டுகள் முதலீடு செய்ததாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இப்போது இந்த 15 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்த ரூ.6 லட்சத்திற்கான வட்டி வழங்கப்படும். அதன்படி, ஆண்டுக்கு ரூ.7.5 சதவீதம் வட்டி என்பதை கணக்கிட்டு 15 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.12,28,979 வட்டியாக கிடைக்கும். இதனுடன் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.6 லட்சம் சேர்த்து மொத்தமாக ரூ.18,28,978 முதிர்வு தொகையாக கிடைக்கும். எனவே, நீங்கள் வெறும் ரூ.6 லட்சம் முதலீட்டை வைத்து 15 ஆண்டுகளில் அதை ரூ.18 லட்சமாக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமககளுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, ரூ.14 மற்றும் ரூ.21 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.