5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வட்டி மட்டும் ரூ.80,000.. அசத்தல் அம்சங்களுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

Recurring Deposit | வங்கிகளில் ஆர்.டி திட்டங்களை விடவும் அஞ்சலக ஆர்.டி திட்டங்கள் சிறப்பானவை. அவை பாதுகாப்பானது மட்டுமன்றி நல்ல வரவையும் அளிக்கும். அவ்வாறு அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.7,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.ரூ.4,99,564. அதன்படி இந்த திட்டத்திற்கான 5 ஆண்டுகளுக்கான வட்டி மட்டும் ரூ.79,564 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி மட்டும் ரூ.80,000.. அசத்தல் அம்சங்களுடன் கூடிய அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Jul 2024 12:16 PM

அஞ்சலக சேமிப்பு திட்டம் : சமீப காலமாக வருங்கால தேவைக்காக சேமிப்பின் தேவையை உணர்ந்து மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அவ்வாறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் பெரும்பாலான மக்கள், அரசாங்க சேமிப்பு திட்டங்களையே தேர்தெடுக்கின்றன. ஏனெனில் அரசாங்க சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், நல்ல வரவுகளை கொடுக்கும் என்பதால் அந்த திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அத்தகையக அஞ்சலக சேமிப்பு திட்டம் தான் ஆர்.டி. இந்த திட்டத்தின் மூலம் வட்டியாக மட்டும் ரூ.80,000 பெற முடியும். திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன, எவ்வாறு முதலீடு செய்வது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

அஞ்சலக ஆர்.டி திட்டம்

வங்கிகளின் ஆர்.டி திட்டத்துடன் ஒப்பிடுகையில், அஞ்சலக ஆர்.டி திட்டம் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் மாதந்தோறும் ரூ.7,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு ரூ.4,99,564 கிடைக்கும். அதாவது 5 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை ரூ.4,20,000 மற்றும் திட்டத்தின் முதிர்வுக்குக்கான வட்டி தொகை ரூ.79,564 கிடைக்கும். இவை இரண்டும் சேர்த்து மொத்தமாக ரூ.4,99,564 இந்த அஞ்சலக ஆர்.டி திட்டம் மூலம் கிடைக்கும்.

மாதம் ரூ.5,000 செலுத்தினால் எவ்வளவு கிடைக்கும்

ஒருவேளை இந்த ஆர்.டி திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.5,000 செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு மாதம் ரூ.5 செலுத்தினால் ஒரு வருடத்திற்கு ரூ.60,000 உங்கள் அஞ்சலக ஆர்.டி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். அதுவே 5 ஆண்டுகளில் ரூ.3,00,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். இந்த தொகைக்கு சுமார் 6.7 வட்டி விதிகப்பட்டால் 5 ஆண்டுகளில் ரூ.56,830 வட்டி தொகை கிடைக்கும். அதன்படி  திட்டம் முதிர்வு அடையும் போது உங்களுக்கு முதலீடு மற்றும் வட்டி தொகை சேர்த்து மொத்தமாக ரூ. 3,56,830 கிடைக்கும்.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டுமா?.. ஈசியா மாத்திடலாம்.. முழு விவரம் இதோ!

அஞ்சல ஆர்.டி திட்டத்தின் வட்டி திருத்தம்

பொதுவாக ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை, அதாவது ஒரு ஆண்டில்  3 மாதங்களுக்கு ஒரு முறை, அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதங்களை அரசு மாற்றி அமைக்கிறது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டியில் டிடிஎஸ் கழிக்கப்படுகிறது. இது ஐடிஆர்  பெற்ற பிறகு வருமானத்திற்கு ஏற்றவாறு திருப்பி அளிக்கப்படும். ஆர்டி-ல் பெறப்படும் வட்டிக்கு 10% வட்டி பொருந்தும். ஆர்டியில் பெறப்பட்ட வட்டி ரூ.10,000-க்கும் மேல் இருந்தால், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஒரு சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அஞ்சலக ஆர்.டி திட்டத்தின் முதலீடு செய்வதன மூலம் நல்ல பலன்களை பெறலாம்.

Disclaimer : இந்தக்கட்டுரை, திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News