Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்! - Tamil News | if you invest 7000 per month for 5 years in post office RD you will get 499564 at end of the scheme | TV9 Tamil

Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

Investment Scheme | மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நிதி பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். எனவே, அனைவரும் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும்.

Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

மாதிரி புகைப்படம்

Published: 

07 Nov 2024 13:11 PM

பொதுமக்கள் சேமிப்பதற்காக அரசு அஞ்சலங்கள் மூலம் பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக RD திட்டம். இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படுவது மட்டுமன்றி, இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நல்ல வருமானத்தையும் பெற முடியும். குறிப்பாக இந்த அஞ்சலக RD திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், அஞ்சலக RD திட்டத்தில் வெறும் ரூ.7,000 முதலீடு செய்து ரூ.4,99,564 லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : டாப் 5 நிலையான வைப்புநிதி திட்டங்கள்.. 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும வங்கிகள்!

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு ஏன் கட்டாயம்

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நிதி பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். எனவே, அனைவரும் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே தான் தனியார் மற்றும் அரசு சார்பில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிக வட்டியுடன் கூடிய சிறந்த லாபம்

அந்த சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். குறிப்பாக அரசின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். காரணம், அரசின் சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்கள் பாதுகாப்பானவை மட்டுமன்றி அதிக லாபம் தரக்கூடியவையாகவும் உள்ளன. எனவே அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

இதையும் படிங்க : MIS : எந்தவித உழைப்பும் இன்றி மாதம் ரூ.5,500 வருமானம்.. அசத்தல் அம்சங்களை வழங்கும் மாத வருமான திட்டம்!

அஞ்சல RD திட்டம்

அஞ்சலக ஆர்டி திட்டம் சிறந்த வட்டியுடன் அதிக லாபத்தை தரக்கூடிய திட்டமாக உள்ளது. இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால் இது மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான் சிறந்த வருமானத்தை பெற முடியும். இந்த திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

முதலீடு செய்வது எப்படி

அரசின் இந்த அஞ்சலக ஆர்டி திட்டத்தில் ரூ,7,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதால் 5 ஆண்டுகளுக்கு மாதம், மாதம் ரூ.7,000 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில், திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.4,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். தற்போது இந்த திட்டத்தின் வட்டி விகிதத்திற்கு வருவோம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில்ம் 5 ஆண்டுகளுக்கு சேர்த்து ரூ.79,564 வட்டியாக கிடைக்கும்.

இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

ஏற்கனவே நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ. 4,20,000 மற்றும் முதலீடு செய்த 5 ஆண்டுகளுக்கான வட்டி ரூ.79,564 இணைந்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.4,99,564 கிடைக்கும். இந்த திட்டத்தை நீங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க விரும்பினால், திட்டத்தின் முடிவில் மொத்தமாக உங்களுக்கு ரூ.12 லட்சம் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
வெங்காயம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமா?
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க..
பாலை காய்ச்சாமல் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!