Post Office FD : அஞ்சலக FD திட்டம்.. ரூ.5,000, ரூ,10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

Investment | அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டங்கள் நல்ல வருமானம் கிடைக்கும் நிலையில், 5 ஆண்டு கால அளவீடு கொண்ட திட்டத்தில் ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Post Office FD : அஞ்சலக FD திட்டம்.. ரூ.5,000, ரூ,10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

மாதிரி புகைப்படம்

Published: 

13 Nov 2024 16:31 PM

சிறந்த வட்டியுடன் அதிக லாபத்தை தரக்கூடிய திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி திட்டம். அதிலும் குறிப்பாக அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், இந்த திட்டம் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதால், மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்திற்கு நல்ல வட்டியும் வழங்கப்படுவதால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் மக்கள் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office FD : முதலீட்டை டபுளாக்கும் அசத்தல் அஞ்சலக திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

நிலையான வைப்புநிதி திட்டம்

மனிதர்களின் பொருளாதாரத்தில் சேமிப்பு ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படடும் ஆபத்து உள்ளது. எனவே, ஒவ்வொருவரும் கட்டாயம் நிதி தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே தான் தனியார் மற்றும் அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

5 ஆண்டு கால முதலீடு

அத்தகைய சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தை பெற முடியும். அந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD என அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், நிலையான வைப்புநிதி திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.5,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

ரூ.5,000 முதலீடு எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அரசின் இந்த அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்த தொகை ரூ.3,00,000 ஆக இருக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த 5 ஆண்டுகளுக்கான வட்டி ரூ.56,830 கிடைக்கும். திட்டத்தின் முதிர்வில், நீங்கள் முதலீடு செய்த தொகை அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.3,56,830 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அரசின் இந்த அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்த தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த 5 ஆண்டுகளுக்கான வட்டி ரூ.1,13,659 கிடைக்கும். திட்டத்தின் முதிர்வில், நீங்கள் முதலீடு செய்த தொகை அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.7,13,659 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!

ரூ.15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

அரசின் இந்த அஞ்சலக நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்த தொகை ரூ.9,00,000 ஆக இருக்கும். அதனுடன் நீங்கள் முதலீடு செய்த 5 ஆண்டுகளுக்கான வட்டி ரூ.1,70,492 கிடைக்கும். திட்டத்தின் முதிர்வில், நீங்கள் முதலீடு செய்த தொகை அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.10,70, கி492 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

கல்யாணம் கன்ஃபார்ம்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ
இணையத்தை கலக்கும் பர்த்டே பேபி அனிகாவின் போட்டோஸ்
ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.