5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Monthly Income Scheme : ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.66,600.. மாதாந்திர வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

MIS Post Office Scheme | தபால் நிலையங்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான், மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் கூடிய வருமானத்தை பெற முடியும். தற்போது இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

Monthly Income Scheme : ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.66,600.. மாதாந்திர வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 14 Jul 2024 17:40 PM

சேமிப்பு திட்டம் : மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தங்களது எதிர்காலம் குறித்த கவலை இருக்கும். அதிலும் குறிப்பாக பொருளாதார கவலை முக்கிய பங்கு வகிக்கும். ஏனென்றால் வளர்ந்து வரும் நவீன உலகில் பொருளாதாரமும் மிக வேகமாக உயருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. எனவே பொதுமக்கள் தங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதன் காரணமாக நீண்ட கால சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதை, தங்களது பணி ஓய்வின் பிறகோ, அல்லது தங்களின் பிள்ளைகளின் திருமண செலவிற்கோ பயன்படுத்துகின்றனர். இவ்வாறு நீண்ட கால முதலீட்டில் சிறந்த பலன்களை வழங்கி வருகின்றன, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள். இந்த திட்டங்களில் இணைந்து பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் மாதாந்திர வருமான திட்டம் மூலம் எப்படி ரூ.60,000 வருமானம் ஈட்டுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கவனம் தேவை

பலரும் நீண்ட கால முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நோக்கில் முதலீடு செய்கின்றனர். ஆனால் நீண்ட கால முதலீடு செய்யும்போது உங்கள் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

தாபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் (MIS) என்றால் என்ன?

தபால் நிலையங்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான், மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் 5 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் கூடிய வருமானத்தை பெற முடியும். தற்போது இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் தனி கணக்கு அல்லது கூட்டு கணக்கை துவங்கலாம். கூட்டுக்கணக்கில் 3 நபர்கள் வரை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Kisan Vikas Patra : 7.5% வட்டி.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ரூ.1,000 முதல் கணக்கை திறக்கலாம். இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் அதிகபட்சமாக ஒரு தனிநபர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவே கூட்டுக் கணக்கில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

உத்தரவாதமான வருமானம் கிடைக்கும்

மாதாந்திர வருமான திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.66,600 வரை உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். உதாரனமாக நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படும். அதன்படி மாதம் ரூ. 5,550 வட்டி கிடைக்கும் என்றால் ஆண்டுக்கு ரூ.66,6000 வட்டி மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News