Post Office RD : வட்டியை வாரி தரும் அஞ்சலக ஆர்.டி திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ! - Tamil News | If you invest in post office recurring deposit you will have good benefit | TV9 Tamil

Post Office RD : வட்டியை வாரி தரும் அஞ்சலக ஆர்.டி திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

Published: 

15 Jul 2024 19:33 PM

Recurring Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் அஞ்சலக ஆர்.டி திட்டம். இந்த திட்டத்தில் பயனர்கள் மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 6.7% வட்டி வழங்கப்படுகிறது.

Post Office RD : வட்டியை வாரி தரும் அஞ்சலக ஆர்.டி திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

அஞ்சலக ஆர்.டி திட்டம் : சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். இதன் காரணமாகவே மக்கள், சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். தனியார் சேமிப்பு திட்டங்களில் நம்பகத் தன்மை குறைவாக உள்ளதன் காரணமாக, மக்கள் அரசின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நம்பகத் தன்மை மட்டுமன்றி, சிறந்த வட்டி மற்றும் ரிட்டன் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் அவற்றில் முதலீடு செய்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் அரசாங்கமும் பலவேறும் சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் அஞ்சலக ஆர்.டி திட்டம்.

அஞ்சலக ஆர்.டி திட்டம் என்றால் என்ன

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் அஞ்சலக ஆர்.டி திட்டம். இந்த திட்டத்தில் பயனர்கள் மாதம் ரூ.100 முதல் சேமிக்கலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 6.7% வட்டி வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை டெபாசிட் செய்யும் பட்சத்தில் நல்ல ரிட்டன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

ரூ.2,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.2,000 டெபாசிட் செய்து வந்தால் 5 ஆண்டுகளில் ரூ.1,20,000 சேமித்து இருப்பீர்கள். அந்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு ரூ.22,732 வட்டி கிடைக்கும். அதன்படி மொத்தமாக உங்களுக்கு ரூ.1,42,732 கிடைக்கும்.

இதையும் படிங்க : Monthly Income Scheme : ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.66,600.. மாதாந்திர வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

ரூ.3,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.3,000 டெபாசிட் செய்து வந்தால் 5 ஆண்டுகளில் ரூ.1,80,000 சேமித்து இருப்பீர்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு ரூ.34,097 வட்டியாக கிடைக்கும். எனவே இந்த திட்டத்தின் முதிர்ச்சியின் போது வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு ரூ.2,14,097 கிடைக்கும்.

இதையும் படிங்க : Kisan Vikas Patra : 7.5% வட்டி.. முதலீட்டை டபுள் ஆக்கும் அசத்தல் திட்டம்.. முதலீடு செய்வது எப்படி?

ரூ.3,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்?

அஞ்சலக ஆர்.டி திட்டத்தில் மாதம் ரூ.5,000 டெபாசிட் செய்து வந்தால் 5 ஆண்டுகளில் ரூ.3,0,000 முதலீடு செய்து இருப்பீர்கள். இந்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு ரூ.56,830 வட்டி கிடைக்கும். எனவே திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.3,56,830 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version