5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பிஎஃப் கணக்கில் வரப்போகும் ரூ.50,000.. EPFO வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Provident Fund | ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் பங்களிக்கு ஊழியர்களுக்கு EPFO ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 20 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பிஎஃப் கணக்கை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் பலன்களின் அடிப்படையில் ரூ.50,000 வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. 20 ஆண்டுகள் ஒரே பிஎஃப் கணக்கில் வரவு வைத்த பிறகு இந்த பணம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும்.

EPFO : ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. பிஎஃப் கணக்கில் வரப்போகும் ரூ.50,000.. EPFO வெளியிட்ட புதிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 08 Jul 2024 18:11 PM

புதிய அறிவிப்பு : ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களித்து வரும் ஊழியர்களுக்கு EPFO ஒரு இனிப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய அறிவிப்பின் மூலம் பிஎஃப் பயனர்கள் ரூ.50,000 பயனடைய உள்ளனர். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பின்பற்றும் ஊழியர்களுக்கு நிச்சயம் ரூ.50,000 வழங்கப்படும் என கூறப்படுகிறது. EPFO சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பிஎஃப் கணக்கில் வரவு வைப்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

இந்தியாவில் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்படும். ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இந்த கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் தங்கள் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தங்கள் பணி காலம் முழுவதும் பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால் அது அவர்கள் ஒய்வு பெற்ற பிறகு ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கபப்டும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது. எனவே ஊழியர்களின் எதிர்காலத்திற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட EPFO

பொதுவாக ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது பிஎஃப் கணக்கை மறந்துவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பழைய கணக்கு அப்படியே நின்று விடுகிறது, இந்நிலையில் தான் EPFO ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும் ஊழியர்ககளுக்கு லாயல்டி-கம்-லைஃப் பலன்களை அளிக்கிறது. இதன் மூலம் ஊழியர்கள் 20 ஆண்டுகள் ஒரே கணக்கில் வரவு வைத்த பிறகு அவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

யார் யார் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள்

லாயல்டி-கம்-லைஃப் பலன்களின் படி, ரூ.5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ல ஊழியர்களுக்கு ரூ.30,000 வரை பணம் வழங்கப்படும். ரூ.5001 முதல் ரூ.10,000 வரை உள்ள ஊழியர்களுக்கு ரூ.40,000 வரை பணம் வழங்கப்படும். இதுவே ரூ.10,000-க்கும் மேல் அடிப்படை சம்பளம் உள்ளவர்களுக்கு ரூ.50,000 வரை வழங்கப்படும்.

இதையும் படிங்க : மாதம் ரூ.40-க்கும் குறைவாக செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டம்.. முழு விவரம் இதோ!

எனவே ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது தங்கள் பிஎஃப் கணக்கையும் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ஊழியர்களுக்கு 20 ஆண்டுகள் கழித்து ரூ.50,000 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News