5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Atal Pension Yojana : ரூ.7 செலுத்தினால் போதும்.. மாதம் ரூ.5,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்!

Pension | சேமிப்பதன் மூலம், பொருளாதாரம் பாதுகாப்பாக இருக்கும். சேமிப்பு இல்லை என்றால் நிதி பற்றாக்குறை, கடன் உள்ளிட்ட சிக்கல்களின் சிக்க நேரிடும். இதனை உணர்ந்த மக்கள் அனைவரும் சேமிக்க தொடங்கிவிட்டனர். அரசாங்க ஊழியரகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால், சுயதொழில் மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லை.

Atal Pension Yojana : ரூ.7 செலுத்தினால் போதும்.. மாதம் ரூ.5,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 16 Aug 2024 20:26 PM

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் : அனைவருக்கும் சேமிப்பு என்பது முக்கியமாகும். ஏனென்றால் சேமிப்பதன் மூலம், பொருளாதாரம் பாதுகாப்பாக இருக்கும். சேமிப்பு இல்லை என்றால் நிதி பற்றாக்குறை, கடன் உள்ளிட்ட சிக்கல்களின் சிக்க நேரிடும். இதனை உணர்ந்த மக்கள் அனைவரும் சேமிக்க தொடங்கிவிட்டனர். அரசாங்க ஊழியரகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால், சுயதொழில் மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லை. கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நிலை நிலையற்று உள்ளது. எனவே தான் மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தினமும் ரூ.7 செலுத்துவதன் மூலம், மாதம் ரூ.5,000 பெறலாம்.

இதையும் படிங்க : EPF Insurance | PF உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரை இன்சூரன்ஸ்.. முழு விவரம் இதோ!

கூலித் தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான உத்தரவாதமான மாதாந்திர திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்த திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக இதுவரை சுமார் 7 கோடி மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில், 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். 18 வயதில் முதலீடு செய்யும் நபர் குறைந்தபட்சம் மாதம் ரூ.210 வரை முதலீடு செய்யலாம். தினமும் ரூ.7 அதாவது மாதம் ரூ.210 சேமிப்பதன் மூலம் 60 வயதில் மாதம் ரூ.5,000 கிடைக்கும். எவ்வளவு பிரீமியம் தொகை செலுத்தப்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல் பென்ஷன் தொகையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Personal Loan : ரூ. 5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்கள்.. குறைந்த வட்டி விதிக்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

நீங்கள் உங்களது 60 வயதில் மாதம் ரூ.5,000 ஓய்வூதியமாக பெற வேண்டும்  என நினைத்தால், உங்களின் 18 வயதில் இருந்து நீங்கள் மாதம் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும். மாதம் மாதம் மட்டுமன்றி 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறையும் பணம் செலுத்தலாம். அதன்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்த வேண்டும் என்றால் ரூ.626 செலுத்த வேண்டும். இதுவே 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்றால் ரூ.1,239 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News