5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cheapest Gold : உலகிலேயே இந்த நாட்டில் தான் மிக குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும்.. எங்கு தெரியுமா?

Bhutan | ஏதேனும் ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால் உடனடியாக பொதுமக்கள் நகை கடைகளுக்கு படை எடுக்க தொடங்கிவிடுவர். ஆனால், உலகின் இந்த ஒரு நாட்டில் வருடத்தின் 365 நாட்களும் தங்கம் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படு வருகிறது.

Cheapest Gold : உலகிலேயே இந்த நாட்டில் தான் மிக குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும்.. எங்கு தெரியுமா?
தங்கம்
vinalin
Vinalin Sweety | Published: 15 Dec 2024 12:46 PM

உலக அளவில் தங்கம் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்கள் சிறு சேமிப்புகளை தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். அத்தியாவசிய நிதி தேவைகளுக்கு தங்கம் கைகொடுக்கும் என்பதால், அணிகலனாக மட்டுமன்றி முதலீடாகவும் மக்கள் தங்கத்தை பார்க்கின்றனர். இவ்வாறு உலக அளவில் தங்கம்,  அதிக மக்களால் பயன்படுத்தப்படுவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே வருகிறது. அதாவது, கடந்த சில மாதங்களில் மட்டும் தங்கம் பல மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் இவ்வாறு கடும் விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், பிற்காலத்தில் தங்கம் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது. ஆனால், உலகிலேயே ஒரு நாட்டில் தங்கம் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அது எந்த இடம், அங்கு எவ்வாறு தங்கத்தை வாங்குவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Farmer Loan : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!

மிக குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் நாடு

மிக குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் நாடு என்றால் பெரும்பாலானவர்களுக்கு துபாய் அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் ஏதேனும் ஒன்று தான் நினைவுக்கு வரும். ஆனால் அது தவறு, உலகத்தில் மிக மலிவான விலையில் தங்கம் கிடைப்பது பூட்டானில் தான். இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் பூட்டானில் தான் தங்கம் மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது. ஆசியாவின் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சிறிய நாடு தான் பூட்டான். இங்கு தான் உலக அளவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தங்கம் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அவை என்ன என்பது குறித்து பின்வருமாறு பார்க்கலாம்.

இதையும் படிங்க : RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

குறைந்த விலையில் தங்கம் விற்கப்படுவதற்கான காரணம் என்ன?

பூட்டானில் தங்கத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை, இதுவே அங்கு தங்கம் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கான காரணமாக உள்ளது. பூட்டானில், அந்த நாட்டின் நிதித்துறையே கடைகள் மூலம் தங்கத்தை விற்பனை செய்கிறது. அந்த நாட்டு குடிமக்கள் மட்டுமன்றி, பூட்டானுக்கு சுற்றுலா செல்லும் மற்ற நாட்டு மக்களாலும் பூட்டானில் வரி இல்லாமல் மிக குறைந்த விலைக்கு தங்கம் வாங்க முடியும். ஆனால், சுற்றுலா பயணிகள் அங்கு தங்கம் வாங்குவதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அதாவது, பூட்டானில் தங்கம் வாங்க விரும்பும் சுற்றுலா பயணிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விடுதியில் ஒரு இரவாவது தங்க வேண்டும். அதுமட்டுமன்றி தாங்கள் வாங்கும் தங்கத்திற்கான அதிகாரப்பூர்வ சீட்டையும் அவர்கள் கேட்டு பெற வேண்டும்.

இதையும் படிங்க : PF Claim : உங்கள் பிஎஃப் க்ளெய்ம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

அமெரிக்க டாலர்களுக்கு மட்டுமே அனுமதி

சுற்றுலா பயணிகள் பூட்டானில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் அவர்கள் அமெரிக்க டாலர்களில் தான் பணம் செலுத்த வேண்டும். இந்தன் நிலையில், இந்தியர்களுக்கு ஒரு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, SDF (Sustainable Development Fees) மட்டுமே செலுத்தினால் போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.1200 முதல் ரூ.1800 வரை செலுத்த வேண்டும். இது அவர்கள் தங்கம் வாங்கும் நடவடிக்கையை மேலும் எளிமையாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News